மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நாம் இனியாவது மக்களுக்கு சேவை செய்ய அதிகாலை சபை நடவடிக்கையை தொடர முன்வர வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல் றபீக் குறிப்பிட்டார்.
கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வில் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி சபை முதல்வர் ஏ.எம் றஹீப்பிடம் மேற்கண்டவாறு கூறினார்
மேலும் தனது உரையில்
சோலை வரி அறவிடுபவர்கள் என வருபவர்கள் சீருடை இன்றி நாகரீகமற்ற முறையில் வீடுகளுக்குள் நுழைகின்றார்கள்.எனது வீட்டிற்கு இவ்வாறு வந்தவர்கள் மக்கள் பிரதிநிதியாகிய என்னுடன் தொடர்பாடலை சரியாக மேற்கொள்ளவில்லை.வந்தவர்களிற்கு பணி தொடர்பிலான எந்த ஆவணமோ அடையாள அட்டையோ கிடையாது.இவ்வாறு தொடர இடமளிக்க முடியாது.மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் சபை நடவடிக்கைகள் மக்களிற்கு சிரமமின்றி கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.
மக்களின் பல பிரச்சினைகள் கிடப்பில் பல உள்ளன.ஆனால் நிதிக்குழு பணிக்குழு என கதைத்து காலத்தையும் நேரத்தையும் வீண்விரயம் செய்கின்றோம்.இங்கு வருவது சம்பளத்தை பெறுவதற்கு அல்ல.எம்மாலான சகல சேவைகளையும் மக்களுக்கு செய்ய வேண்டும்.
இதனை செவிமடுத்த மேயர் எதிர்காலத்தில் சுபஹ் வேளையில் தொடங்கி 6 மணிக்கு முடிப்போம்.அவ்வாறு நேரம் காணாத விடத்து மீண்டும் மாலை 7 மணிக்கு தொடங்கி சபை நடவடிக்கையை 12 மணிக்கு முடிப்போம் என்றார்.
இதற்கு மாநகர உறுப்பினர் அதிகாலை(தஹஜத்) நேரத்திலாவது சபை நடவடிக்கையை தொடர்ந்து மக்களிற்கு சேவை செய்வோம் என தெரிவித்தார்.