கடந்த மாதம் இனவாத தாக்குதலுக்கு உள்ளான பல பகுதிகளை நாம் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுடன் நேரடியாக பார்வையிட சென்றிருந்தோம் முஸ்லிம்களுடைய வீடுகள் பள்ளிகள் உள்ளிட்ட பல சொத்துக்கள் சேதமாக்கப்பட்டிருந்ததை நாம் அவதானித்தோம்.
அதிகமான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை இன்று அரசாங்கம் விடுவித்திருக்கின்றது ஆனால் முஸ்லிம்களுடைய சொத்துக்கள் அளிக்கப்பட்டதற்கான எந்தவொரு நஷ்டயீட்டுத் தொகையையும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது கவலை அளிக்கின்றது என அன்மையில் நிகவெரட்டிய மத்திய குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேசசபை உபதவிசாளர் இர்பான் குருநாகல் மாவட்ட கல்வி பொறுப்பாளர் ரியாஸ் (அஸ்ஹரி) நிகவெரட்டிய தொகுதி அமைப்பாளர் ரஹ்மதுல்லாஹ் (ஆசிரியர்) உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்:
குருநாகல் மாவட்டத்தில் சுமார் 28 ஊர்கள் தாக்கப்பட்டுள்ளது 4பேர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர் 130 வீடுகள் உடைக்கப்பட்டுள்ளது 24 பள்ளிகள் உடைக்கப்பட்டுள்ளது 127 கடைகளும் கடைகளில் இருந்த பொருட்களும் அநியாயமாக அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சுமார் 32 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பற்றவைக்கப்பட்டுள்ளது அத்தோடு 26 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன் சில வாகனங்கள் பெட்ரோல் ஊற்றப்பட்டு பற்ற வைக்கப் பட்டுள்ளது.
அரசாங்க பாடசாலை ஒன்றும் மத்ரஸா ஒன்றும் தாக்கப்பட்டுள்ளது மேலும் ஜம்மியதுல் உலமாவின் குருநாகல் மாவட்ட கிளை தாக்கப்பட்டுள்ளது 4 கோழி பன்னைகள் தாக்கப்பட்டுள்ளது என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
கோடிக்கணக்கான சொத்துக்கள் அளிக்கப்பட்டும் மௌனமாக இருந்த காவல்துறை மற்றும் இராணுவத்தினரும் இருந்தது போன்று இன்று அரசாங்கமும் நஷ்டயீடுகளை வழங்கும் விடயத்தில் மௌனம் காக்கிறது.
கடந்த காலங்களில் கண்டி திகன அளுத்கம போன்ற இடங்களில் நடைபெற்றது போன்று இன்றும் இந்த அரசாங்கம் நஷ்டயீட்டுத் தொகையை வழங்காமல் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதானது இதன் பின்னணியில் அரசாங்கம் இருக்கிறதா என்ற சந்தேகம் நமக்கு இன்று எழுந்து கொண்டிருக்கின்றது.
கடந்த தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக முஸ்லிம் மக்கள் அனேகமானவர்கள் வாக்களித்திருந்தார்கள் ஆனால் வாக்குகளை பெற்ற பின்னர் அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து நடப்பது எதிர்காலங்களில் அவர்களுடைய அரசியல் விடயங்களை கேள்விக்குறியாக்கும் என்பதனை இவர்கள் மறந்துவிடக்கூடாது.
இன்று எமது கட்சியின் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் மீது கடந்த 21ம் திகதி நடைபெற்ற தாக்குதலை திசைதிருப்பி அரசியல் இலாபம் பெற பலர் முயற்சி செய்கின்றனர் அவரின் பாதுகாப்புக்காக துஆ செய்வோம் என்றும் தெரிவித்தார்.