நோன்புப் பெருநாள் செய்தி


*உயர் இலட்சியங்களை அடைய திடசங்கற்பம் பூணுவோம்!*

ன்றைய தினம் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஈதுல் பித்ர் பெருநாள் என்பது தொடர்ச்சியாக ஒரு மாத காலம் நோன்பு நோற்று, இரவு காலங்களில் நின்று வணங்கி இறை நெருக்கத்தையும், இறை வழிகாட்டலை அடைந்துகொண்ட மனநிலையையும் மகிழ்ச்சியையும் ‘அல்லாஹு அக்பர்’ எனக் கூறி அல்லாஹ்வை பெருமைப்படுத்தி அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கும் தினமாகும்.'

மேலும் அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடாக புத்தாடைகளை அணிந்தும் நல்ல உணவுகளையும் வாழ்த்துக்களையும் சந்தோஷத்தையும் பரிமாறிக் கொள்ளும் தினமுமாகும்.
எமது சமூகத்தின் வழி தவறிய சில இளைஞர்களின் மிலேச்சத்தனமான செயற்பாட்டினாலும் அதனை சந்தர்ப்பமாக பயன்படுத்த முனையும் சில சக்திகளாலும் இக்கட்டான ஒரு சூழலில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டிருக்கின்றோம்.

இந்த சந்தர்ப்பத்தில் மனம் தளர்ந்து விடாமல் பெருநாளை மிக எளிமையாகக் கொண்டாடுவோம்… பெருநாள் தொழுகையோடு நாட்டுக்கும் சமூகத்துக்கும் தீய சக்திகளின் பிடிகளிலிருந்து உண்மையான விடுதலை வேண்டிப் பிரார்த்திப்போம். இலங்கையின் நல்லதொரு எதிர்காலத்துக்காகவும் அடுத்துவரும் காலங்களில் உழைக்க முன்வருவோம். அல்லாஹ் எங்களது நற்செயல்களைப் பொருந்திக்கொள்வானாக!

அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி
தலைவர்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -