திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் விபரக் கொத்து அடங்கிய நூல் வெளியீட்டு விழா


ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஊடக கோவைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழாவானது திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் அ.அச்சுதன் தலைமையில் இடம் பெறவுள்ளது.
இக் குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வானது 22.06.2019 ம் திகதி அன்று சனிக் கிழமை மாலை 3.00 மணிக்கு திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
மங்கள விழக்கேற்றலுடன் ஆரம்பமாகும் நிகழ்வில் வரவேற்புரையை சங்கத்தின் செயலாளர் ஆர்.ஜீ.தர்மதாச நிகழ்த்துவர்.நூல் பற்றிய அறிமுகத்தை சுயாதீன ஊடகவியலாளர் வடமலை ராஜ்குமார் நிகழ்த்த நூல் பற்றிய பார்வையை சுயாதீன ஊடகவியலாளர் லக்மால் பதுகே நிகழ்த்துவதுடன் இறுதியாக நன்றியுரையினை சங்கத்தின் சிரேஷ்ட உபதலைவர் ஏ.எல்.றபாய்தீன் பாபு முன்வைப்பார்.
ஊடக சங்கத்தின் இக் குறித்த மீடியா டிரக்டரி நூலில் மாவட்ட பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்களின் புகைப்படத்துடன் கூடிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய முக்கிய அரச நிறுவனங்களின் தொலைபேசி அடங்கிய விபரங்களும் திரட்டப்பட்டு உள்ளடக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள ஏனைய மாவட்டங்களை விடவும் மூவினத்தையும் உள்ளடக்கிய ஒரே சங்க உறுப்பினர்களை கொண்ட ஊடகவியலாளர் சங்கமாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் செயற்பட்டு வருகிறது.
இவ் நிகழ்வில் முதன்மை அதிதிகளாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்மந்தன், சுசந்த புஞ்சிநிலமே, எம்.எஸ்.தௌபீக் உள்ளிட்ட மாவட்ட ஊடகவியலாளர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -