கடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் தகுந்த காரணங்கள் எதுவுமின்றி கைது செய்யப்பட்ட சம்மாந்துறையை சேர்ந்த மூவர் விடுதலை.


எஸ்.அஷ்ரப்கான்-
டந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் தகுந்த காரணங்கள் எதுவுமின்றி கைது செய்யப்பட்ட ஆறு பேர் முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் குழுவின் தலையீட்டினால் நேற்று (20) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறையை சேர்ந்த மூவரும், சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒருவரும், திருகோணமலையைச் சேர்ந்த ஒருவரும், கம்பளையைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களாகும்.
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத செயப்பாட்டுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தகுந்த காரணம் எதுவுமின்றி கடந்த மே மாதம் 13ஆம் திகதி கண்டி கலேகெதர பிரசேத்தில் வைத்து 06 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பிணை இன்றி விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

இதில் சம்மாந்துறையை சேர்ந்த மூன்று நபர்களையும் விடுதலை செய்வதற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிரினால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் இயங்கிவரும் கட்சியின் சட்டத்தரணிகள் குழு ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தலைமையிலான சட்டத்தரணி குழுவினருக்கும் குறிப்பாக இது விடயத்தில் களத்தில் நின்று பாடுபட்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிருக்கும் பாதிக்கப்பட்ட பெற்றோர்களும் விடுதலை செய்யப்பட்ட இளைஞர்களும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -