இந்த நாட்டில் நமது இருப்பை உறுதி செய்ய ஒன்றாக கைகோர்ப்போம் - இஷாக் எம்.பி

ஐ.எம்.மிதுன் கான்-
னுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டின் கீழ் கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கஹட்டகஸ்திகிலிய பிரதான வீதியிலிருந்து துறுக்குராகம வரை செல்லும் பிரதான வீதி கார்பட் இட்டு புணர் நிர்மாணம் செய்யும் வேலைகள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபை உறுப்பினர்களான நசீர், சகீத் ஆகியோரும், குறித்த பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊர் மக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
அனுராதபுர மாவட்டத்தில் மிகவும் பிந்தங்கிய கிராமம் என்ற நாமம் தாங்கிய பல ஆண்டுகள் பழைமை வாய்ந்த இதுபோன்ற கிராமங்கள் பல காணப்படுகின்றன. அவையாவும் இம்மாவட்ட அமைச்சர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தென்படுவதில்லை என்பதனை இதுபோன்ற பிரதேசங்களில் காணப்படும் பாதைகள், பாடசாலைகள் என்பவற்றை பார்க்கும்போது தெட்டத்தெளிவாக புரிகின்றது.

காலம் காலமாக காழ்ப்புணர்வோடு செயல்பட்டு மக்களை ஏமாற்றி வாக்குகளை சூரையாடி சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகள் குறித்து மக்கள் கவனம் செலுத்த வேண்டிய தருனமிது.

இனியாவது மக்கள் தங்கள் சிந்தனைகளை கிளர்ந்தெழெச்செய்ய வேண்டும். தம்மை பகடக்காயாக பயன்படுத்தி அரசியல் இலாபம் அடைய நினைக்கும் அரசியல்வாதிகளை இனம் கண்டு இனி வரும் தேர்தல்களில் அவர்களது முதலைக்கண்ணீர்களுக்கு ஏமாந்துவிடாமல் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்பதில் உறுதியாய் இருங்கள்.
இனி வரும் காலங்களில் ஒற்றுமையொன்றே எமது பலமாய் அமையுமென்பதில் ஐயம் கொள்ள வேண்டாம். ஒற்றுமையெனும் கயிற்றை பற்றிப்பிடித்து, வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது ஒற்றுமையின் பலத்தை வெளிக்காட்டுவோம் என்பதில் உறுதியாய் இருங்கள்.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் உறுப்பினர்களும் இம்மாதம் 3 ஆம் திகதி நம் சமூகத்திற்காய் ஒன்றினைந்ததை செய்தி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நம் சமூகத்திற்காக நம் தலைவர்களே ஒன்றிணைந்திருக்கும்பொழுது எம் பிரதேசங்களில் எதற்கு பாகு பாடு?? இந்த நாட்டில் நமது இருப்பை உறுதி செய்ய வேண்டுமென்றால் ஒற்றுமையொன்றே அதற்கான வளி என்பதனை உள்ளத்தில் உதிக்கச்செய்து அதனடிப்படையில் தங்கள் செயற்பாடுகளை அமைத்துக்கொள்ளுங்கள்.
என தெரிவித்தார்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -