முஸ்லிம் சமூகம் ஓரணியாக நின்று ஒற்றுமைப்பட்டுஅனைத்துச் சவால்களை எதிர்கொண்டு பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டும்.




  மன்சூர் எம்.பி. 
நாட்டில் பயங்கரவாதமோ, அடிப்படைவாதமோ தலைதூக்கக் கூடாது. அதன் ஆபத்தின் வடிவங்களை இந்த நாடு மீண்டுமொருமுறை எதிர்நோக்கக் கூடாது என்பதே இந்நாட்டை நேசிக்கும் அனைத்து இனமக்களின் அபிலாஷையாகும். என என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் வேண்டுகோளின் பேரில் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் “யாவருக்கும் நிழல்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 320 வறிய குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 45 மற்றும் 85 வீடுகளைக் கொண்ட மூன்று மாதிரி கிராமத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்திய முகாமையாளர் ஏ.எம்.இப்றாஹீம் தலைமையில் நேற்றுமுன்தினம்(31) சம்மாந்துறை மலையடிக்கிராமம் மற்றும் செந்நெல் கிராமங்களில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே - ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்பாராத விதங்களிலெல்லாம் சவால்களையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் முஸ்லிம்கள் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும்.
வரலாற்றில் முன்னெப்பேபாதுமில்லாதவாறு சவால்களைச் சந்தித்துள்ள இலங்கை முஸ்லிம் சமூகம் ஓரணியாக நின்று ஒற்றுமைப்பட்டு அந்தச் சவால்களை எதிர்கொண்டு பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டும்.
இன்று நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து, சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையும், புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தையும் கேள்விக்குட்படுத்தி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு முஸ்லிம் சமூகம் பலிக்கடாவாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -