கல்முனை மாநகரில் இன ஐக்கியத்துக்கான பொசன் விழா..!


அஸ்லம் எஸ்.மௌலானா-
ராணுவத்தினரின் வேண்டுகோளின் பேரில் நாளை ஞாயிற்றுக்கிழமை கல்முனை மாநகரில் தமிழ், முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு ஏற்பாட்டில் இன ஐக்கியத்திற்கான பொஷன் விழாவை நடாத்துவது தொடர்பான மற்றொரு கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை (15) கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், பொலிஸ் மற்றும் இராணுவ உயரதிகாரிகள், கல்முனை வர்த்தகர் சங்கம், சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம், கல்முனை தமிழ் மக்கள் மன்றம், கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகளும் மற்றும் சில பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

இவ்விழாவை முன்னிட்டு கல்முனை மாநகரை முழுமையாக அலங்கரிப்பது எனவும் சுமார் 1000 பேருக்கு தன்சில் எனும் அன்னதானம் வழங்குவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வது எனவும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக ஏற்பாட்டுக்குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.
இவ்விழாவில் பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள், சமய, சமூகப் பெரியார்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவர்களுடன் கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள கல்விமான்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்களும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்து, இன ஐக்கியத்தை வலுப்படுத்த முன்வர வேண்டும் என கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் மேற்படி கலந்துரையாடலின்போது அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -