கிராமத்து வளங்களைக்கொண்டு வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான உத்திகளை வகுக்க வேண்டும்


தவிசாளர் நிரோஷ்-
மது கிராமத்தில் எம்மைச்சூழ காணப்படும் வளங்களைக்கொண்டு அவ் வளங்களை உச்சமாகப் பயன்படுத்தி தொழில் துறைகளை வடிவமைப்பதாக எமது இலக்குகள் காணப்படவேண்டும். இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

சிறுப்பிட்டி ஜனசக்தி மண்டபத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக மக்களின் சிபாரிசுகளையும் ஆலோசனைகளையும் பெறுவதற்கான கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்வில் சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றுகையில், ஒரு காலகட்டத்தில் அரசியல் தலைமைத்துவமும் அதிகாரிகளும் நினைப்பதை அல்லது வழங்குவதை மக்கள் அபிவிருத்தியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை காணப்பட்டது. ஆனால் இப்போது மக்களுக்கு எவ்விடயம் அபிவிருத்தியாக முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டுமோ அதனை அவர்கள் முன்மொழிந்து பெற்றுக்கொள்வதற்கான சரியான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இதனை நாம் பொருத்தமான அபிவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது. காரணம் நாம் நமக்கான அபிவிருத்தியை தீர்மானிப்பவர்களாக சக்திமயப்படுத்தப்பட்டிருக்கின்றோம்.

எங்களுக்கு பல தேவைகள் காணப்படலாம். அவற்றினை எல்லாம் நாம் அபவிருத்திக்கான அடிப்படைகளாகக் கருதிவிடக்கூடாது. நீங்கள் அரச முதலீட்டின் வாயிலாக ஒரு திட்டத்தினை நிறைவேற்றுகின்றீர்கள் என்றால் அதற்குள் முக்கியமாக உங்கள் பகுதியில் காணப்படும் வளங்கள் பயன்பாடுடையதாகின்றதா? சுற்றாடல் பாதுகாக்கப்படுகின்றதா? நீங்கள் முன்மொழிந்த அபிவிருத்திகள் வாயிலாக எதிர்காலத்தில் இந்தக் கிராமத்தில் என்ன முன்னேற்றம் ஏற்படுகின்றது போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். உங்கள் அபிவிருத்தி தொடர்பான நாட்டத்தினை தகவமைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு நாம் செய்யாவிட்டால் அபிவிருத்தியின் வாயிலாக நாம் பயனடையப்போவதில்லை.

இன்று எம் முன் உள்ள அபவிருத்திக்கான சவால்களில் கிரமம் தோறும் காணப்படும் வளங்களை நாம் உரியவாறு பயன்படுத்தத் தவறி வருகின்றமை எம்மைப் பாதிக்கின்றது. இருப்பதைக்கொண்டு ஒரு கிராமமாக, ஒருபிரதேசமாக நாம் எவ்வாறு முன்னேறலாம் எனச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். அதற்காக சனசமூக நிலையங்களில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துமாறு நான் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்துகின்றேன்.
இலங்கையில் கிராம மட்டத்தில் சரியான அரச நிர்வாகக் கட்டமைப்பு தேவைக்கேற்றதாகக் காணப்படுகின்றது. கிராமசேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், அபவிருத்தி உத்தியோகத்தர் இவற்றுக்கு மேலாக தற்போது வட்டாரம் தோறும் பிரதேச சபை உறுப்பினர்களும் காணப்படுகின்றனர். ஆகவே எம்மைச் சுற்றி பல்வேறு கருமங்களை ஆற்றத்தக்க அரச நிர்வாகம் உள்ளது. இவ்வாறான நிலையில் நாம் சகல சூழ்நிலைகளையும் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதுபோன்று அதிகாரிகள் உத்தியோகத்தர்களும் தமது பணியை மக்கள் மீண்டெழவேண்டும் என்ற இலட்சியத்துடன் புரிய வேண்டும். இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -