மகாநாயக்க தேரர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது -முபாரக் அப்துல் மஜீட்

ம‌ஹாநாய‌க்க‌ தேர‌ர்க‌ளின் நிதான‌மான‌ உரை மிக‌வும் பாராட்ட‌த்த‌க்க‌தாகும். அனைத்து முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ளும் ராஜினாமா செய்த‌மை யாரும் எதிர் பார்க்காத‌ ஒன்று என்ப‌து அவ‌ர்க‌ளின் உரையில் தெரிகிற‌து. 

அத்துட‌ன் அமைச்ச‌ர்க‌ளோ பிர‌தி அமைச்ச‌ர்க‌ளோ ஏதும் குற்ற‌ச்சாட்டு இருந்தால் அவ‌ர்க‌ள் முன் வ‌ந்து த‌ம்மை நிர‌ப‌ராதி என‌ தெளிவுப‌டுத்த‌ வேண்டும் என‌ ம‌ஹாநாய‌க்க‌ தேர‌ர்க‌ள் கூறியிருப்ப‌து பொருத்த‌மான‌தாக‌ தெரிய‌வில்லை. 

குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் தாம் நிர‌ப‌ராதி என்ப‌தை முழு உல‌குக்கும் தெரிய‌ப்ப‌டுத்திவிட்டார்க‌ள். அவ‌ர்க‌ள் நிர‌ப‌ராதி என்ப‌தை அறிவிக்கும் க‌ட‌மை பாதுகாப்பு த‌ர‌ப்பிற்கு உண்டு. அது ம‌ட்டுமே பாக்கியாக‌ உள்ள‌து.

ஆக‌வே குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம் த‌லைவ‌ர்க‌ளுக்கெதிரான‌ குற்ற‌த்தை அர‌சு குறிப்பிட்ட‌ த‌வ‌ணைக்குள் நிரூபிக்காவிட்டால் அவ‌ர்க‌ளும் த‌ம் ப‌த‌விக‌ளை பெற‌ வேண்டும் என்ப‌தை ம‌ஹாநாய‌க்க‌ தேர‌ர்க‌ள் அறிவிக்க‌ வேண்டும்.

இத‌ன் ப‌டி அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன், ஹிஸ்புள்ளா, ஆசாத் சாலி போன்றோர் மீண்டும் த‌ம் ப‌த‌விக‌ளில் இருக்க‌ ம‌ஹாநாய‌க்க‌ தேர‌ர்க‌ள் அறிவிக்க‌ வேண்டும்.

இன்றுள்ள‌ நிலை அதாவ‌து அனைத்து அமைச்ச‌ர்க‌ளும் ப‌த‌விகளை ராஜினாமா செய்துள்ள‌ நிலை நாட்டுக்கு ந‌ல்ல‌த‌ல்ல‌ என்ற‌ ம‌ஹாநாய‌க்க‌ தேர‌ர்க‌ளின் க‌வ‌லை நியாய‌மான‌து, உண்மையான‌து. இத‌னை இப்போதாவ‌து உண‌ர்ந்த‌மை பாராட்டுக்குரிய‌து.

 ஆனாலும் முஸ்லிம் ச‌மூக‌ம் தொட‌ர்ச்சியான‌ பொய்க்குற்ற‌ச்சாட்டுக்க‌ளுக்கு முக‌ம் கொடுக்க‌ முடியாது என்ப‌த‌ன் விளைவே அனைவ‌ரின‌தும் ராஜினாமாகும். இத‌ற்குரிய‌ பொறுப்பை உண்ணாவிர‌த‌ம் இருந்த‌ அத்துர‌லிய‌ தேர‌ரும் அவ‌ருக்கு துணையாக‌ நின்றோருமே பொறுப்பேற்க‌ வேண்டும்.

இந்த‌ நாட்டின் முஸ்லிம்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுட‌ன் மிக‌வும் அந்நியோன்ய‌மாக‌ வாழ்ந்து வ‌ருப‌வ‌ர்க‌ள் என்ப‌தை ம‌ஹாநாய‌க்க‌ தேர‌ர்க‌ள் புரிந்துள்ள‌மை ந‌ல்ல‌ ச‌மிக்ஞையாக‌ இருந்தாலும் இத‌னை மேலும் காப்ப‌த‌ற்குரிய‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை ம‌த‌த்த‌லைவ‌ர்க‌ள் என்ற‌ வ‌கையில் தேர‌ர்க‌ள் எடுக்க‌ வேண்டும். 

எதிர் கால‌த்தில் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் பொய் குற்ற‌ச்சாட்டுக்க‌ளை முன் வைப்ப‌தை த‌டுக்கும் வ‌கையில் முஸ்லிம் த‌லைவ‌ர்க‌ள் மீது குற்ற‌ம் இல்லை என‌ நிரூபிக்கப்ப‌ட்டால் அவ‌ர்க‌ள் மீது குற்ற‌ம் சாட்டிய‌ ஊட‌க‌ங்க‌ளும் அர‌சிய‌ல்வாதிக‌ளும் ப‌கிர‌ங்க‌மாக‌ ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும் என்ப‌தையும் ம‌திப்புக்குரிய‌ ம‌ஹாநாய‌க்க‌ தேர‌ர்கள் அறிவிக்க‌ வேண்டும் என‌ முஸ்லிம் உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -