இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
தேசிய தவ்ஹீத் ஜமாஅத்துக்கு கல்முனையில் பகிரங்கமாக இயங்கும் கிளை இருப்பதாக தெரியவில்லை. அப்படி கல்முனை வடக்கு பிரதேச செயல்கத்துக்கெதிராக பள்ளியில் கூட்டம் நடத்தியிருந்தால் நிச்சயம் ஊடகங்களில் செய்தி வந்திருக்கும். ஆனால் இப்படியொரு செய்தி ஊடகங்களில் முஸ்லிம்கள் நாமே காணாத போது கோடீஸ்வரன் இட்டுக்கட்டுக்களை சொல்லி தமிழ் முஸ்லிம் உறவை சிதைக்க முற்படுகிறார்.
அத்துடன் இஸ்யாமிய சாம்ராஜ்யத்தை உருவாக்க முணைவோரே இத்தடைக்கு பின்னால் உள்ளதாகும் கற்பனைகளை சொல்லியுள்ளார்.
இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாக கல்முனை முஸ்லிம்கள் இஸ்லாமிய சாம்ராஜ்ய தீவிரவாதத்துக்கு எதிரான மக்களாகும். இதன் காரணமாகவே கல்முனை, சாய்ந்தமருது மக்கள் இஸ்லாமிய சாம்ராஜ்ய (ஐ எஸ்) தீவிரவாதிகளை காட்டிக்கொடுத்தனர். இத்தகைய ஒரு சில தீவிரவாதிகள் அனைவரும் ஒன்றில் கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது கைது செய்யப்பட்டு விட்டனர் என்பதை பாதுகாப்பு தரப்பு அறிவித்தமை கோடீஸ்வரனுக்கு தெரியாதா?
இப்படி இருக்க ஐ எஸ் தீவிரவாதிகள் கல்முனையின் எந்தப்பள்ளியில் வைத்து கல்முனை வடக்கு செயலகத்துக்கெதிராக கூட்டம் நடத்தினார்கள் என்பதை சரியான ஆதாரத்துடன் அவர் நிரூபிக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு பாராளுமன்றில் சிறப்புரிமைகள் உள்ளன என்பதற்காக பொய்யையும் புரட்டுக்களையும் பேசி சமூகங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.