இதேவேளை முன்னாள் அமைச்சர்களான கபீர் ஹஷிம், ரஊப் ஹகீம், ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் பிரதிநிதிகள், தமது அமைச்சு பதவிகளிலிருந்து விலகியமை தொடர்பான கடிதங்கள் சபாநாயகருக்கு கிடைத்துள்ளதை அடுத்து நாளைய (18) பாராளுமன்ற அமர்வு தொடர்பில் இன்றைய தினம் குறித்த பிரதிநிதிகளுக்கு ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கட்சியின் தலைமை பொறுப்புகளில் வகிக்கின்றமை காரணத்தினால் ஐ.தே.க.வின் தவிசாளர் கபீர் ஹஷிம், ஶ்ரீ.ல.மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கான முன்வரிசை ஆசனங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் அவர்களுக்கு பின்வரிசைகளில் ஆசனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் அப்போதைய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரை பதவி விலகுமாறு தெரிவித்து அத்துரலியே ரத்தன தேரர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் மற்றும் பொது பல சேனா அமைப்பினர் கண்டியிலிருந்து மேற்கொண்ட பேரணி ஆகியன காரணமாக, நாட்டில் ஏற்பட்ட சிக்கலான சூழ்நிலை மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை தவிர்க்கும் வகையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளுகம் தங்களது அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமாக செய்வதாக அறிவித்தமை குறிப்பிடத் தக்கது.