கல்முனையை ரன்முத்துகல சங்கரத்ன தேரர், பசுமையான நகரமாக மாற்றம் செய்ய நடவடிக்கை! (வீடியோ)


பாறுக் ஷிஹான்-
ல்முனை பிராந்தியத்தை பசுமையான நகரமாக மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர்
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் கல்முனை பிராந்தியத்தை முறையாக அபிவிருத்தி செய்ய வில்லை.எனவே தான் இந்த பிராந்தியத்தை பசுமையான பகுதியாக மாற்ற எனது தலைமையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.நகரத்தை முதலில் பூச்சட்டி அலங்காரம் உள்ள சாடிகளை வைத்து இந்நிகழ்வை ஆரம்ப செய்ய உள்ளேன்.இந்த செயற்பாட்டிற்கு கல்முனை மாநகர முதல்வர் ஒத்துழைப்பு தர வேண்டும்.மரங்களும் காலக்கிரமத்தில் அப்பகுதிகளில் நாட்டப்படும்.எனவே இதற்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பை தர வேண்டும்.

கல்முனை சாய்ந்தமருது வர்த்தக சங்க தலைவர்கள் இதற்காக தங்கள் பங்களிப்புகளை எனக்கு வழங்க வேண்டும்.உடனடியாக இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்தி எதிர்காலத்தில் இந்த நகரத்தை அழகான பிரதேசமாக மாற்ற வேண்டும்.
எனவே இன மத மொழி பேதமின்றி இச்செயற்திட்டத்தை ஒன்று கூடி இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -