அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இடம்பெறவுள்ளபயிற்சிக் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இன்று (29) சனிக்க்கிழமை சீனா பயணமானார் என சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வங்கி, நிதிப் பிரிவின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் ஐ.அலியார் தெரிவித்தார்.
ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் சார்பில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் 21 நாட்கள் இடம்பெறவுள்ள சிறுகைத்தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சியில் கலந்து கொள்வுள்ளார் எனவும் தெரிவித்தார்.
ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அம்பாறை, புத்தளம், வவுனியா, நுவரெலியா ஆகிய நான்கு மாவட்ட பணிப்பாளர்களுக்கு இவ்வாய்ப்பு வழங்கப்பட்டு சீனா சென்றுள்ளனர் எனவும் இணைப்பாளர் அலியார் மேலும் தெரிவித்தார்.
மாவட்ட பணிப்பாளர் சப்றாஸ் குருநாகல் மாவட்டத்தில் சமுர்த்தி மாவட்ட பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் மாவட்டத்தின் பெரும்பான்மை அரசியல் தலைவர்களினதும், அரச அதிகாரிகளினதும் பெரும்பான்மை சமூகத்தினதும் நன்மதிப்பை பெற்றவர் என்பதுடன் சிறந்த நிர்வாகியுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.