தனிநபர் பிரேரணையால் எனது போராட்டத்தை ஆரம்பித்தவன் : எந்த தேர்தலுக்கும் தயாராக இருக்கிறேன் - ஏ.எம்.ஜெமீல்

எமது நிருபர்-
ம்மை நாமே ஆளும் நகரசபை போராட்டத்தை நாமே ஆரம்பித்தோம். அன்று நான் மாகாணசபையில் தனிநபர் பிரேரணையை சகல சக்திகளையும் எதிர்த்து கொன்றுசென்று சாதித்தேன். அதனை தொடர்ந்து நகரசபை போராட்டத்தை நமது மக்கள் ஆரம்பித்த போது கட்சிகளை கடந்து போராட்டத்தை மதித்து எனது கட்சியின் ஆதரவாளர்கள், அமைப்பாளர்கள்,மற்றும் எனது நண்பர்களை அனுப்பிவைத்தேன். அந்த போராட்டம் புத்துணர்வுடன் முன்னெடுக்கப்பட்டது என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் குழுத்தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

சாய்ந்தமருது இளைஞர் சம்மேளத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பவுஸி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இளைஞர் விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசிய அவர் மேலும் தனது உரையில்

நான் பிறந்த பிரதேசத்தை சுயநலங்களுக்கு ஒருபோதும் அனுமதிக்க நான் விடமாட்டேன். யாருக்கும் நான் அஞ்சவோ அல்லது கெஞ்சவோ மாட்டேன். அரசியலுக்கு வருவது எனது நிலைப்பாடாக அன்றும் இருந்ததில்லை இன்றும் இருக்கவில்லை. யாரையும் தேவையில்லாமல் விமர்சிக்க எனக்கு உடன்பாடு இல்லை . எனது அனுபவங்கள் மூலம் எனது பிரதேச இளைஞர் தலைவர்களை நான் எப்போதும் சரியாக நெறிப்படுத்தி வழிகாட்ட தயாராக இருக்கிறேன். எமது சமூகத்தை பிழையாக வழிநடத்துபவர்களை விடக்கூடாது. எதிர்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் நான் இந்த பிரதேசத்தின் வேட்பாளராக களமிறங்க தயாராகவுள்ளேன்.
இளைஞர்களே !! உங்களை பிழையாக வழிநடத்தி, பிழையாக பயன்படுத்துபவர்களை நீங்கள் இனங்காணவேண்டும். எனது ஊருக்கு நான் என்னை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன். எனது கனவு சாய்ந்தமருது நகரசபையே. எனது சமூகத்தை கொன்று குவித்த கருணாவை கல்முனைக்கு அழைத்து முஸ்லிங்களை ஏளனம் செய்யும்போது எங்களால் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. இந்த விடயத்தில் சர்வதேச அழுத்தங்கள் பரவலாக இருக்கிறது. தேரர்களை கொண்டு இவர்கள் இவற்றை முன்னெடுக்கிறார்கள். என மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை மற்றும் காரைதீவு சபைகளின் உறுப்பினர்கள், இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர். வெற்றியீட்டியவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -