முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், மற்றும் அசாத் சாலியை கைது செய்யுமாறு கோரியும், குருநாகல் வைத்தியர் சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு தகுந்த தண்டனை வழங்கக் கோரி யும் இன்றையதினம் நுவரெலியா நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எதிர்ப்பு வாசகங்களை எழுதிய சுலோகங்களை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு சுமார் 100ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய சுதந்திர முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாகாணத்தின் முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் நிமல் பியதிஸ்ஸ, நுவரெலியா பிரதேச சபையின் உப தலைவர் சரத் குமார உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.