அத்துரலிய ரத்ன தேரருக்கு எதிராக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய CID பிரிவு தீர்மானம்..!


வைத்தியர் ஷாபி மீது சுமத்தப்பட்டுள்ள குடும்ப கட்டுப்பாடு தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வரும் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலான அழுத்தங்களை கொடுத்து, தடையேற்படுத்தியமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்தும் ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு வந்த அத்துரலிய ரத்ன தேரர், வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட தினத்திற்கு முதல் நாள் குருணாகல பிரதேசத்திற்கு சென்றிருந்ததுடன், இந்த சம்பவத்தை அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தக் கூடாது, சமூக அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறி இனவாத ரீதியான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் CID பிரிவின் அதிகாரிகளுக்கு பிள்ளைகள் இருக்கின்றனர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று அச்சுறுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

தனது ஆதரவாளர்களுடன் நேற்று குருணாகல நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றிருந்த அத்துரலிய ரத்ன தேரர், CID பிரிவின் ASP திசேராவின் தோளில் தட்டி அச்சுறுத்தும் வகையில், “ உலகமும் இதனை பார்த்துக் கொண்டிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய அத்துரலிய ரத்ன தேரர், ASP திசேராவை பகிரங்கமாக கடுமையாக சாடியிருந்தார்.

இவ்விதமாக அத்துரலிய ரத்ன தேரர், தொடர்ந்தும் விசாரணை அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அழுத்தங்களை கொடுப்பதால், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய CID பிரிவு தீர்மானித்துள்ளது.நன்றி செய்தி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -