குறித்த ஆக்கம் சட்டபீடத்தின் இறுதி வருடத்தில் இருக்கும் போது என்னால் ஆங்கில ஆய்வு நூல் ஒன்றில் இருந்து மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டு சில புதிய விடயங்களும் சேர்க்கப்பட்டு உள்ளூர் சஞ்சிகை ஒன்றில் 2011ம் ஆண்டு பதிவிடப்பட்டது காலத்தின் தேவை கருதி மீள் பதிவிடுகின்றேன்.
உரிமை என்பது மனித இனத்திற்கு மட்டும் வரையறுக்கப்படாமல் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் உரியது என்ற எண்ணக்கருவை இஸ்லாம் இற்றைக்கு 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே அறிமுகப்படுத்தியது,ஆனால் 20 ஆம் நூற்றாண்டிலேயே மேற்கத்தேய சமூகம் மனித உரிமைக் கோட்பாட்டை இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் வாழ்கை முறைகளில் இருந்தே தோற்றுவித்தது. அல்-குர்ஆனே இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையாகும்.இஸ்லாமிய சட்டவியல் ஒழுங்கமைப்பு மூன்று கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
முதலாவது: தவ்ஹீத், (ஏகத்துவம்) இதன்படி உலகத்தின் இறைமையாளனும், நிலையானவனும் அல்லாஹுத்தால மாத்திரமே. இரண்டாவது: ரிஸாலத்,( தூதுத்துவம் ) இது இஸ்லாமிய சட்டவியலை செயற்படுத்தும் பொறுப்பு அல்லாஹ்வின் தூதர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைக் குறிக்கும் மூன்றாவது: கிலாபா,(பிரதிநிதித்துவம்)இதன் மூலம் இறை நியதிகளை இறைவனின் விதிமுறைகளுக்கு இணங்க செயற்படுத்தி நீதி செலுத்தும் பொறுப்பு அல்லாஹ்வின் பிரதிநிதிகளான மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய ஆட்சியில் அல்லாஹ் சட்ட வாக்கத்தின் தலைவராகவும் அல் குர் ஆன் அரசியல் அமைப்பாகவும்(கொண்சிடியுசன்)இறைத்தூதர்கள் நிறைவேற்றுத் துறையின் தலைவர்களாகவும்(அமைச்சர்கள்) ஹதீஸ் கலை மற்றும் இஐ;மாஇகியாஸ் என்பன நியதிச் சட்டங்களாகவும்(ஓடினண்ஸ்)), இஸ்லாமிய அரசுகள் கீழ் நிலை நீதி மன்றங்களாகவும்(லோவர் கோட்ஸ்) செயற்படுவதோடு, உயர் நீதி மன்றமாக(சுப்ரீம் கோர்ட்) மஹ்ஸரும், அதன் நீதி அரசனாக(பிரதம நீதியரசர்) அல்லாஹூத்தாலாவும் செயற்படுவான்.
இஸ்லாமிய மனித உரிமை நிலையற்ற மன்னர்கள் அல்லது ஆட்சியாளர்கள் அல்லது சட்ட நிபுணர் குழுவால் வரையப்பட்டது அல்ல.இது நிலையான ஆட்சியாளன் அல்லாஹ்வால் உருவாக்கப்பட்டுள்ளதால் அதனை மீளப்பெறவோ, கைமாற்றவோ முடியாது.இஸ்லாம் என்பது பூகோள ரீதியாக மனித இனத்திற்கான உரிமைகளை அனைவரும் எத்தகைய சூழ் நிலையிலும் ஏற்று மதிப்பளித்து, கவனமாக கையாளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது.இந்த மனித உரிமையானது நாடுகளுக்கு உள்ளேயும,; ஒரு நாட்டுப் பிரஜை மற்றுமொரு நாட்டினுள் வசிக்கும் போதும், சமாதான மற்றும் யுத்த காலத்திலும், அவசரகால நிலமைகளிலும் ஓரே மாதிரியான அணுகு முறையையே கையாளுகிறது.
மனித இரத்தம் புனிதமானது அது நீதியான முறையில் அன்றி சிந்தப்படக் கூடாது என்பதன் மூலம் இஸ்லாம் மேற்கத்தேய நாடுகள் கூறி வரும் வாழ்வதற்கான உரிமை(ரைட்டு லைப்) யை இற்றைக்கு 1500 வருடங்களுக்கு முன்பே உலகிற்கு அறிமுகப்படுத்தியது.இந்த உயிர் வாழும் உரிமையை புவியிலே நிலைநாட்டவே 'பெருமானார் (ஸல் ) அவர்கள் உலகிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்டார்கள்'( 21:107).
இன்றய மேற்கத்தேயமும்; இஸ்லாமிய சட்டவியலும் கூறும் மனித உரிமைகளை ஒப்பிடுவோமாயின் இஸ்லாமிய மனித உரிமை மானிட வர்க்கத்தை கீழ்த்தரமான சிந்தனைப் போக்கில் இருந்து மாற்றி கொளரவமான, நடுநிலையான சமூகமாக வாழ வைத்த பெருமைக்குரியது, ஆனால் மேற்கதேயம் அறைகூவல் விடும் மனித உரிமைகள் ஆட்சியாளர்களினதும், அதிகார வர்க்கத்தினதும் எண்ணங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதை காண முடியும். அந்தஸ்து, பால், இனம,; நிற வேறுபாட்டுக்கு அப்பால் மனிதன் அல்லாஹ்வின் பிரதிநிதி என்ற அம்சம் மாத்திரமே இஸ்லாம் கூறும் மனித உரிமையில் புதைந்துள்ளது.இஸ்லாமிய மனித உரிமையானது ஆட்சியாளனும், அடிமையும் அல்லாஹ்வின் சட்டத்தின் முன் சமன் எனக் கூறி மானிட வர்க்கத்திற்கு சம கொளரவத்தை கொடுக்கின்றது.
இஸ்லாம் மனித உரிமையை பின்வரும் 5 விடயங்களினூடு அறிமுகப்படுத்தியுள்ளது.
வாழ்வதற்கான உரிமை (ரைட்டு டு லைப்)
வாழ்விற்கான பாதுகாப்பை பெறும் உரிமை (ரைட்டு டு சேப்டி ஒப் லைப்)
பெண்களின் கற்பினை பாதுகாக்கும் உரிமை (ரைட்டு டு சஸ்டிடி ஒப் விமன்)
தனிமனித சுதந்திரம் (ரைட்டு டு பிரிடம் ஒப் இன்டிவிசுவல்)
சமத்துவமாக மற்றும் நீதியான முறையில் நடத்துவதற்கான உரிமை( த ரைட்டு டு ஈகுவாலிட்டி யனெ ஜஸ்டிஸ் ஒப் ஹியுமன் பீயிங்)
மேற் கூறிய உரிமைகள் அனைத்தும் இன்று நாட்டுக்கு நாடு மாறுபட்ட கோணங்களில் பயன் படுத்தப்பட்டாலும்இ இஸ்லாத்தில் இந்த உரிமைகள் தனித்துவமானதும். மனிதனை புனிதனாக வாழ வைக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.ஒரு மனிதன் அவனின் கொள்கைக்காக கொலை செய்யப்படுவதை அல்லது அவனை கொலை செய்ய எத்தனிப்பதை இஸ்லாம் தடுப்பதோடு அவ்வாறு செய்தால் முழு சட்டத்தையும் மீறுவதாகவே கருதுகிறது.'எவர் ஒருவர் இன்னொரு உயிரை வாழ வைக்கிறாரோ அவர் முழு உயிரையும் வாழ வைத்தவர் போலாவார.; ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொலை செய்தால் அவர் முழு மனித உயிரையும் கொலை செய்தவர் போலாவார';(அல்-குர்ஆன் 5:32).
இது மனித இனத்திற்கு மாத்திரம் அன்றி ஏனைய ஜீவராசிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.ஒரு உயிரினத்தை உணவுக்காக அறுக்கும் போது கூட அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டால் மாத்திரமே அது இஸ்லாமிய சட்ட அந்தஸ்தைப் பெறும். இஸ்லாமிய சட்டம் உயிர் வாழும் உரிமையை மனித குலம் அனுபவிப்பதற்கு அப்பால் முழு உயிரினங்களுக்கும் வழங்கியுள்ளது.
இறைவனால் விதிக்கப்பட்ட சட்ட நியதிகளுக்கு அப்பால் எந்த ஒரு உயிரையும் பறிக்க முடியாது,மேலும் 'வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளை கொலை செய்தும் விடாதீர்கள் என்று அல்-குர்ஆன் எடுத்துக் கூறுகிறது.'(6:151).பெருமானார் (ஸல்) அவர்கள் படுகொலை என்பது பெரும் பாவங்களில் ஒன்று எனவும்இ ஒரு மனிதன் சுகயீனம் அல்லது காயமுற்று இருக்கும் நிலையில் அவருக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் அவரது தேசியம்இ இனமஇ; அல்லது நிறம் என்பதை கவணியாது நீங்கள் அவரது காயம் அல்லது நோய்க்கு மருத்துவம் செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கின்றார்கள். ஒருவன் வறுமையின் காரணமாக இறக்கும் கட்டத்தை அடையும் நிலையில் இருக்கும் அவனுக்கு உணவு ஊட்டி அவனுக்கு வாழ்கைப் பாதுகாப்பை அளிக்கும் படி இஸ்லாமிய மனித உரிமை கூறுகிறது. ஆனால் மேற்கதேயம் இன்று பொருளாதார தடை விதிப்பதன் மூலம் அப்பாவி உயிர்களை பறிப்பதற்கான செயலில் முழு அளவில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இஸ்லாம் வாழ்க்கைக்கான பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் முகமாக அரசியல் அமைப்பான அல்-குர்ஆனிலே ஸகாத் மற்றும் ஸதகா போன்ற வறுமை ஓழிப்பு திட்டங்களை இற்றைக்கு 1500 வருடங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்படுத்தி மனிதர்களிடையே பொருளாதார இஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளது.
பெண்ணியல் வாதம் பேசும் மேற்கதேயம் மதச்சார்பின்மை எனக்கூறி இன்று ஒரு பெண் அடிப்படை தேவையான ஆடையினைக் கூட தனது விருப்பின் படி அணிவதற்கு தடை விதிக்கின்றது.ஆனால் புனித இஸ்லாம் மனித இனத்திற்கே நன்மை பயக்கும் பொருட்டு ஒருவரின் ஆடைச் சுதந்திரம் இன்னெருவரின் மனக்கிலேசங்களையும்,; ஆசைகளையும் தூண்டி பாவத்தை நோக்கி குறித்த நபர் செல்வதை தடுப்பதற்கும், பெண்களின் மானத்தையும்,கொளரவத்தையும் பாதுகாக்கவும் பெண்களுக்கான ஆடைகளை இறை சட்டத்தின் மூலம் தீர்மானித்துள்ளது.
'மானக்கேடானவற்றில் வெளிப்படையானதையும்,இரகசியமானவற்றையும் செய்ய நீங்கள் நெருங்காதீர்கள'; (அல்-குர்ஆன் 17:32) எனக்கூறி அனைவரதும் கற்புக்கும் பாதுகாப்பளிப்பதோடு திருமணத்தை மார்க்க கடமையாக்கி கணவன்-மனைவிக்கிடையே அனைத்து சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது. இதுதான் இஸ்லாம் கூறும் மனித உரிமை ஆனால் இஸ்லாமிய பெண்ணுரிமையை கொச்சைப்படுத்த நினைக்கும் மேலத்தேயமும் கீழத்தேயமும் பெண்களை வெறுமனே காட்சிப் பொருளாகவே பார்க்கின்றார்கள்.
பெண்களுக்கான சம உரிமை என்ற எண்ணக்கருவை தோற்றுவித்த மேற்கத்தேய சமூகம் பெண்களின் பொறுப்பினை புறக்கணிப்பதன் ஊடாக குடும்ப வாழ்வில் அமைதியின்மையினை ஏற்படுத்தியுள்ளது.சுபீட்சமான குடும்ப அமைப்பினை ஏற்படுத்துவதினூடு இஸ்லாம் பெண்களுக்கான சம உரிமையை அவர்களின் உடலியல்(ஆழசிhழடழபல) கட்டமைப்புக்கு இணங்க ஏற்பாடு செய்துள்ளது.
தனிமனித சுதந்திரம் இஸ்லாமிய மனித உரிமை சட்டத்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதில் இருந்து உருவாக்கப்பட்டது.முகம்மது நபி (ஸல்) அவர்கள் அடிமையாண்மைக்கு எதிராக மாத்திரம் போராட வில்லைஇ சமுதாயத்தில் அவர்கள் சுயாதீனமாக இயங்க உன்னத இடம் வழங்கினார்கள்.இதனை உண்மைப்படுத்தும் விதமாக கறுப்பு அடிமை பிலால் (ரழி) அவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக அதான் ஒலித்து சமுதாயத்தில் இஸ்லாமிய சட்டம் தனிமனிதனின் சமுதாய வகிபாகத்தை உலகிற்கு முதன் முதலில் அறிமுகம் செய்தது.இஸ்லாமிய சட்டவியல் தனித மனித சுதந்திரத்தை ஈருலகிலும் ஏற்பாடு செய்துள்ளது இதனை அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது 'ஒவ்வொரு ஆத்மாவும் இன்னொரு ஆத்மாவின் சுமையை சுமக்கமாட்டாது' என்பதினூடு தனி மனித சுதந்திரத்தை பயன்படுத்துவதின் விளைவுகள் நன்மையாக அல்லது தீமையாக இருந்தாலும் அது தனிமனிதனையை சாரும் எனவே தனிமனித சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதை இட்டும் இஸ்லாம் எச்சரிக்கின்றது.
இஸ்லாமிய சட்டம் மனிதனுக்கு வழங்கிய மிகப்பிரதான உரிமை நீதியாக சமமாக நடத்தப்படுவதற்கான உரிமையாகும்.இஸ்லாமிய சட்டம் உரோமச் சட்டம் அல்லது ஏனைய உலகலாவிய சட்டங்களை விடவும் உயர்ந்தது.இஸ்லாமிய நீதியை அல்-குர்ஆன் கூறும் போது 'விசுவாசம் கொண்டோர நீங்கள் சாட்சி கூறினால் அது உங்கள் பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினர்களுக்கோ விரோதமாக இருந்தாலும் நீதியை நிலைநிறுத்தியவர்களாக அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுங்கள் மேலும் சாட்சி கூறும் அவர் பணக்காரராக அல்லது ஏழையாக இருந்தாலும் சரி உண்மையையே கூறுங்கள்.நீங்கள் நியாயம் வழங்குவதில் (உங்கள் மனோ) இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்இநீங்கள்(சாட்சியத்தை) மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறாது) புறக்கணித்தாலும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்குனர்பவனாக இருக்கிறான்.'(அல்-குர்ஆன் 4:135).
இஸ்லாத்தில் அனைவரும் சமன் நிறவேறுபாடுஇஇனம் தேசியத்திற்காக ஆள் எவரும் பாரபட்சம் காட்டப்பட முடியாது.சமத்துவத்திற்கான உரிமையை அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.'ஏ மனித இனமே உங்கள் அனைவரையும் ஒரு ஆணிலும் பெண்ணிலிருந்துமே படைத்தோம்' மற்றுமொரு வகையில் கூறப்போனால் ஒவ்வொரு மனிதனும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் அனைவரும் ஒரு தாய் தந்தையின் வழித்தோன்றல்களே.
இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கும் சிறந்த நலன்கள் காணப்படுகிண்றன.இஸ்லாமிய மனித உரிமையும் உலகளாவிய மனித உரிமையும் ஒப்பிடும் போது இஸ்லாமிய மனித உரிமையிலே மாத்திரமே ஒழுக்கக் கோட்பாடு முதன்மைப்படுத்தப்பட்துள்ளது.மனித இனத்திற்கு உண்மையான தேவை என்னவெனில்இ ஒழுக்க நெறியாகும் இது மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியது இதுவே அனைத்து தீங்குகளுக்கும் கவசமாக செயற்படும். மனித உரிமையை ஒழுக்க நெறியினூடு தெளிவாக விளக்கி செயற்படுத்தும் பெருமைக்குரிய மார்க்கம் இஸ்லாம் மாத்திரமே இதற்கு சமமாக வேறு சமயமோ அல்லது சட்டமோ பாரிலே இதுவரைக்கும் தோன்றவோ அல்லது தோன்றி நிலைக்கோவோ இல்லை.