திடிர் காய்ச்சல் மற்றும் சுவாசிக்க முடியாமல் அவதியுற்ற 08 மாணவர்கள்
வைத்தியசாலையில் அனுமதி
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ டின்சின் தமிழ் மகா
வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் 08 மாணவர்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்
05.07.2019. காலை கல்வி நடவடிக்கையிலிருந்த மாணவர்களே 11மணி அளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்
பாடசாலையில் மாணவர்கள் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேலை தரம் 10யை சேர்ந்த மாணவர்கள் 08 பேக்கு திடிர் காய்ச்சல் மற்றும் சுவசிக்க முடியாமல் மூச்சுத்தினரலினால் பாாதிப்படைந்துள்னர்
வைத்தியசாலையில் அனுமதித்த மாணவர்களுள் 07 பெண்களும் ஒரு ஆணும் உள்ளடங்கவதாகவும் குறித்த மாணவர்கள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை என வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்கே. ஜயசூரிய தெரிவித்தார்
இதேவேலை குறித்த எட்டு மாணவர்களும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று
வருவதோடு சம்பவம் தொடர்பில் பாடசாலை கட்டிட தொகுதிக்கு சென்ற பொகவந்தலாவ பிரசேத்திற்கு பொருப்பான பொதுசுகாதார பரிசோதகர் கனேசன் தலைமையில் விசாரனைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக குறிப்பிட்டார்.