கடந்த 12 மாத காலப்பகுதியில் 2 இலட்சத்து 21,000 தொழில் வாய்ப்புகள்

ஐ. ஏ. காதிர் கான்-

டந்த 12 மாத காலப்பகுதியில் 2,21,000 தொழில் வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக, அரச புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் காலாண்டுப் பகுதியில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 33.5 சத வீதத்தில் இருந்து 34.9 சத வீதமாக அதிகரித்தது. இதே போன்று, ஆண்களின் எண்ணிக்கை 73.4 சத வீதமாக அதிகரித்துள்ளது.

ஆண்களில் தொழில் அற்றோரின் எண்ணிக்கை, கடந்த வருடத்தில் இரண்டு சத வீதமாக அதிகரித்தது.

இதேவேளை, பெண்கள் தொழிலற்றோர் எண்ணிக்கை 7.4 சத வீதத்தில் இருந்து 6.9 சத வீதமாகக் குறைந்துள்ளது. சேவை தொழிற்துறை 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 12 மாத காலப் பகுதிகளில் தொழில் வாய்ப்புக்கள் 2,52,502 ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விவசாய தொழிற் துறையில் ஈடுபட்டோர் எண்ணிக்கை விழச்சி கண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டை அண்டிய முதல் காலாண்டுப் பகுதியில் 52.0 சத வீதத்தில் இருந்து 52.6 சத வீதமாக அதிகரித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -