காரைதீவு சகா-
கதிர்காம ஆடிவேல்விழாவையொட்டி பாதயாத்திரையாக காட்டுக்குள் பயணிக்கும் யாத்திரீகர்களுக்கு கடந்த சனிக்கிழமை(28) முதல் அக்கரைப்பற்று சிவதொண்டன் அமைப்பினர் குடிநீரை விநியோகித்துவருகின்றனர்.
கிழக்கின் தென்கோடியிலுள்ள கிழக்கையும் ஊவாவையும் பிரிக்கும் எல்லையிலுள்ள குமுக்கன் ஆற்றுக்கு அப்பால் யாலகாட்டுப்பகுதியில் இவர்களது விநியோகம் இடம்பெற்றுவருகிறது.
அதற்காக கடந்த வியாழனன்று சிவதொண்டன் அமைப்பின் தொண்டர்கள் மஞ்சள்நிற சீருடை சகிதம் 5பவுசர் ட்ராக்டருடன் தலைவர் மு.கருணாநிதி தலைமையில் உகந்தையிலிருந்து பயணமானார்கள்.
காட்டுப்பகுதியில் யாத்திரீகர்கள் தங்கும் பயணிக்கும் முக்கிய இடங்களில் நீர்த்தாங்கிவைக்கப்பட்டிருக்கும். அவற்றுக்கு இராணுவப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.அவற்றை இந்நீர் வவுசர்கள் சென்று நிரப்புவது வழமையாகும்.
அதற்காக இத்தொண்டர்கள் இரவுபகல்பாராமல் தொடர்ந்து 12தினங்கள் நீரைவழங்கி ஜீவசேவையாற்றுவார்கள்.
உகந்தையிலிருந்து குமுக்கன் ஆறுவரைக்குமான குடிநீர்விநியோகம்இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.