காரைதீவு நிருபர் சகா-
வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமக் கந்தனாலய ஆடிவேல்விழாவின் தீர்த்தோற்சவம் எதிர்வரும்17ஆம் திகதி புதன்கிழமை மாணிக்கங்கையில் நடைபெறுமென ஆலய பஸ்நாயக்க நிலமே தில்ருபன் ராஜபக்ச தெரிவிக்கிறார்.
வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலய ஆடிவேல்விழா தீர்த்தோற்சவம் எதிர்வரும்18ஆம்திகதி வியாழக்கிழமை சமுத்திரத்தில் நடைபெறுமென ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க(சுதா) தெரிவிக்கிறார்.
இவ்வாலயங்களின் தீர்த்தோற்சவ திகதிகள் தொடர்பில் அடியார்களுக்கு சரியான தெளிவின்மை நிலவுவதாக கூறப்பட்டதையடுத்து குறித்த ஆலயங்களின் தலைவர்களிடம் தொடர்புகொண்டு இவ்விளக்கம் தரப்படுகிறது.
இவ்விரு ஆலயங்களினதும் கொடியேற்றம் ஒரே திகதியில் அதாவது கடந்த 3ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மாவடி ரதோற்சவம்!
இதேவேளை காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா தற்சமயம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
ஆலயத்தின் மாவடி தேரோட்ட நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை காலை 8மணிக்கு ஆலயவளாகத்தில் நடைபெறுமென ஆலய பரிபாலனசபை செயலாளர் த.சிவகுமார் தெரிவித்தார்.
இவ்வாலயத்தின் தீர்த்தோற்சவம் 18ஆம் திகதி வியாழக்கிழமை தேரோடும்வீதிவழியாக காவடிகள் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் சகிதம் ஊர்வலமாகச்சென்று சமுத்திரத்தில் இடம்பெறுமென அவர் மேலும் தெரிவித்தார்.