நாட்டில் கைவிடப்பட்ட நிலையில் 1958 குளங்கள்..

ஐ. ஏ. காதிர் கான்-

ல்வேறு காரணங்களால் நாட்டில் 1958 குளங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக, கமநல அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட மாகாணம் மற்றும் மொனராகலை, அநுராதபுரம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு பெரும்பாலான குளங்கள் கைவிடப்பட்டுள்ளதாக, திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தக் குளங்கள், வனவள பாதுகாப்புத் திணைக்களத்திற்கு உரித்தான காணிகளில் உள்ளதால், மீண்டும் அவற்றைப் புனரமைப்பது தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாக, திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் தலைமை அதிகாரி பிரபாத் வித்தாரண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைவிடப்பட்ட குளங்களைப் புனரமைப்பது குறித்து, வனவள பாதுகாப்புத் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் வறட்சியுடனான வானிலை நிலவுகின்ற சந்தர்ப்பங்களில், நீர்ப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய முடியும் எனவும், கமநல அபிவிருத்தித் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -