மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆசாத் நகர் தாருஸ் ஸலாம் அறபிக் கல்லூரிக்கான புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றது
கல்லூரியின் அதிபர் எம்.ஜரீஸ் முப்தி தலைமையில் இன்று (04) இடம் பெற்ற நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்கள் அடிக்கல்லினை நட்டி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மீள்குடியேற்ற செயலணி திட்டத்தின் ஊடாக சுமார் 25 இலட்சம் ரூபா செலவில் இக் கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது
குறித்த நிகழ்வில் கணியமணல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் அப்துல் றசாக் நளீமி, பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ், ஜெஸீலா,ஸ்ரீகாந்த், முன்னால் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் நிஸ்மி உட்பட பலர் கலந்து சிறப்பித்தார்கள்.