இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உப தலைவரும் முன்னாள் மாத்திய மாகாண உறுப்பினருமான கணபதி கணகராஜ் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம் விசேட நிருபர்-தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி பல போராட்டங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுத்தது. ஆனால் ஆயிரம் ரூபா சம்பள பெற்றுக்கொடுக்க விட்டாலும் பேச்சுவாரத்தையின் போது பல விட்டுக்கொடுப்புக்கள் மத்தியில் 750 ரூபா அடிப்படை சம்பளத்தனை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுத்து, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. அப்போது நாங்கள் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்து விட்டோம.ஆகவே நாங்கள் இதனை ஏற்றுக்கொள்ள போவதில்லை தொழிலாளர்களுக்கு குறைந்தது அரசாங்கத்தின் மூலம் 140 ரூபா பெற்றுத்தருவோம். இல்லையேல் அரசாங்கத்திலிருந்து வெளியேறும் என்று மாரபை தட்டிக்கொண்டு கூறிய அமைச்சர் திகாம்பரம்,அமைச்சர் மனோ கணேசன் ஆகியோர், இன்று 50 ரூபாவினை கூட பெற்றுக்கொடுக்வில்லை. தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்த்துவதற்கு அவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுப்பார்களேயானால் அதற்கு முழுமையான ஆதரவினை வழங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராக உள்ளது.; அப்படி இல்லையென்றால் அரசாங்கம் ஒத்துக்கொண்ட 50 ரூபாவினை பெற்றுக்கொள்வதற்காக கூட்டு ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்ட அதே அலமாளிக்கு தொழிலாளர்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரின் அனுமதியுடன் அணிதிரட்டுவகை தவிர வேறு வழியில்லை. என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் முன்னாள் மத்திய மாகாண உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான கணபதி கணகராஜ தெரிவித்தார்.
இன்று ( 03) ஹட்டனி நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் மனோ கணேசன் மற்றும் அமைச்சர் திகாம்பரம் அவர்கள் அரசாங்கத்துடன் பேசி தேயிலை சபையினூடாக நாளொன்றுக்கு 50 வீதம் பெற்றுத்தர நிதி அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாகவும,; அந்த 50 ரூபா கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளிலிருந்து கிடைக்கும. என்றும் சொன்னார். அது ஏப்ரேல் என்றார்கள் ஆனால் இன்று வரை அது கிடைக்கவில்லை. இன்று சொல்கிறார்கள் அமைச்சர் குழு ஒன்றினை அமைத்து அது தொடர்பாக ஆராய்ந்து பெற்றுத்தருவதாக, இது முழுக்க முழுக்க தொழிலாளர்களை ஏமாற்றும் செயப்பாடு. ஆகவே தொழிலாளர்களை ஏமாற்றாது தங்களுக்கு முடியவில்லை. என்றால் அரசாங்த்திலிருந்து அன்று கூறியதை போல் இவர்கள் பதவி விலகி மக்களோட மக்களாக நின்று போராட வேண்டும் என, அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு இன்று வடகிழக்கில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமன வழங்கப்பட்டுள்ளது. இதனை கல்வி ராஜங்க அமைச்சரும் பிரதமரின் தலைமையிலேயே நடைபெற்றன. ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன் மலையகத்தில் உதவி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு ஆசிரியர் பயிற்சியினை பூர்த்தி செய்துள்ளவர்களை ஏன் இன்னும் ஆசிரியர் சேவையில் உள்வாங்கவில்லை. அவர்களின் நேர்முகப்பரீட்சைக்காக வெளியிடப்பட்ட வர்ததமானி அறிவித்தலில் கூறப்பட்ட தகைமைகளையும் பூர்த்தி செய்திருக்கிறார்கள.; எனவே இவர்களை உடனடியான ஆசிரியர் சேவையில் உள்வாங்க வேண்டும்.அசாங்கம் மாகாண சபைக்கு தான் அதிகாரமம் உள்ளது என்று பிரச்சினையினை மற்றவர்கள் மீது திணித்து ஆசிரியர்களை வீதியில் இறக்கி போராட்டம் செய்வதற்கு முன் இதனை செய்ய வேண்டும் இல்லையேல் நாங்கள் நீதி மன்றம் சென்றாவது இந்த பிரச்சினையினை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.