மட்டக்களப்பு - காத்தான்குடி கடற்கரைக்கு சென்றவர்களுக்கு இன்று ஆச்சரியம் ஒன்று காத்திருந்துள்ளது.
அதாவது குறித்த கடற்பரப்பிலிருந்து 880 கிலோ கிராம் எடையுடைய மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
880 கிலோ கிராம் எடையுடைய திருக்கை ரக மீனொன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மீன் கரையொதுங்கிய செய்தி காட்டுத்தீ போல் ஊரெங்கம் பரவியுள்ளது.
இதையடுத்து ஏராளமான மக்கள் இந்த மீனை பார்க்க ஆவலுடனும் ஆச்சரியத்துடனும் வந்து சென்றுள்ளனர்.
பார்ப்பதற்கு மிகவும் பெரிய அளவிளான குறித்த மீனை அனைவரும் புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளனர்.
இவ்வாறான திருக்கை மீன் கரையொதுங்குவது இதுவே முதல் தடவை எனவும், அதிசயமான சம்பவம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.