முல்லைத்தீவு மாந்தை கிழக்கு அம்பாள்புர மீனவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் பொருட்டு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் சென்ற வருட விஷேட நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெறப்பட்ட சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் (4) இன்றைய தினம் அம்பாள்புர மீனவர்களிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டன.
கடலோடும் அலையோடும் சளையாமல் போராடும் மீனவ சமூகத்தின் உழைப்பு எமது தேசிய பொருளாதாரத்தில் பாரிய பங்களிப்புச் செய்வதாக இங்கு உரையாற்றிய கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் குறிப்பிட்டார்.
இன்று வழங்கப்படும் இவ்வலைகள் இந்த அம்பாள்புர மீனவச் சமூகத்தின் வாழ்வாதாரங்களை மேலும் மேம்படுத்தும் உயரிய நோக்கோடு வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி. நிரஞ்சனா,
பிரதேச சபை உறுப்பினர்களான திரு. சீலன் மற்றும் திரு. சிந்துஜன்,
மாந்தை கிழக்கு பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர்,
மீனவசமூகப் பிரதிநிதிகள் பயனாளிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -