எங்களைச் சுற்றி காவியுடை தரித்தவர்கள் ஒருசிலர்கள் அல்லது வன்முறைகளைத் தூண்டுகின்றவர்கள், முஸ்லிம்களை கொன்றொழிக்க வேண்டும் என்று சொல்லுகின்றவர்கள், முஸ்லிம்கள் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்கின்றார்கள் என்று அநியாயமாக பழிசுமத்துகிறவர்கள் அல்லது முஸ்லிம்கள் எதிர் காலத்திலே இந்த நாட்டைப் பிடித்து விடுவார்கள் என்று அச்சத்தை அநியாயமாக தோற்றுவிக்கின்றவர்கள் எல்லோரையும் தோக்கடிக்கின்ற பொறுப்பு முஸ்லிம்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மீராவோடையில் வியாழக்கிழமை (4) ம் திகதி தையல் பயிற்சியை நிறைவுசெய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
நாங்கள் எல்லோரும் எங்களுடைய ஈமானையும் எங்களுடைய பர்தாக்களையும், பள்ளிகளையும் சதிகார பௌத்த துறவிகளிடத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது எனவே விரைவில் நடக்க இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் எல்லோரும் வீதிற்கு வந்தேயாக வேண்டிய ஒரு தேவைப்பாடு ஜனாதிபதி தேர்தலிலே இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.
இதை இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற யுவதிகள், பெரியவர்கள், வயது போனவர்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பிச்சை எடுக்கின்றவர்கள் கூட இந்தப் பணியை செய்தே ஆக வேண்டும். அப்படி செய்தால்தான் இந்த சமூகத்தின் வல்லமை தெரியவரும். இந்த முஸ்லிம் சமூகத்தை புறந்தள்ளிவிட்டு ஒரு ஜனாதிபதி வர முடியாது என்கின்ற செய்தியை சிறுபான்மை சமூகமான தமிழ் சமூகத்தையும், கிருஸ்தவ சமூகத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் புறந்தள்ளிவிட்டு நூறு வீதம் பௌத்த வாக்குகளால் ஒரு ஜனாதிபதியாக வர முடியும் என்று மகிந்த ராஜபக்ச போன்றவர்கள் காண்கின்ற கனவுக்கு சாவுமணி அடிக்க வேண்டிய பொறுப்பு இந்த நாட்டிலே இருக்கின்ற ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது அதுபோன்று இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கும் இருக்கின்றது.
இதிலே மிகவும் தெளிவாக நீங்கள் இருந்து கொள்ளுங்கள் இதற்குள்ளே நீங்கள் வேறுவிதமான கதைகளை கதைத்துக் கொண்டிருந்தால், வேறு கட்சி ரீதியான குரோதங்களை வளர்த்துக் கொண்டிருந்தால் அல்லது நாங்கள் அப்படி நடப்போம், இப்படி நடப்போம் என்று பேசிக் கொண்டிருந்தால் ஒட்டுமொத்தமாகா தோக்கடிக்கப்போவது இந்த நாட்டிலே இருக்கின்ற ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். அதனோடு இணைந்து ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகமும் இந்த நாட்டிலே மதிக்கப்படாது தூக்கி எறியப்படுகின்ற அல்லது துரத்தப்படுகின்ற ஒரு சமூகமாக நாங்கள் மாற்றமடைந்து விடுவோம்.
இறைவன் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கான தயார்படுத்தல்களை முஸ்லிம் அரசியல் தலைவர்களாகிய நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம் அந்தப்பணியில் நாங்கள் உங்களை அழைப்பு விடுக்கின்ற போது நீங்களும் எங்களோடு சேர்ந்து தோளோடு தோள்சேர்த்து உழைக்க வேண்டும் பள்ளிவாசல் தலைவர்கள், பள்ளிவாசல்கள், நிறுவனங்கள் என்று இந்தப் பிரதேசத்தில் என்னென்ன அமைப்புகள் எல்லாம் இருக்கின்றதோ அந்த அமைப்புகள் எல்லாம் வீதியிலே இறங்கி பணியாற்ற வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.
முஸ்லிம்களுக்கு தற்போது இருக்கின்ற பயங்கரவாதம் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் வரை தொடர்ந்தேர்ச்சியாக இருக்கும். நாளை முடிந்து விடும் மறுநாள் முடிந்துவிடும் என்று நீங்கள் யாரும் யோசிக்காதீர்கள் எப்போது ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து அவர்கள் எதிர்பார்க்கின்ற ஜனாதிபதியை பெற்றுக் கொள்ளலாம் என்று அவர்கள் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றார்களோ, அல்லது கற்பனை செய்து கொண்டிருக்கின்றார்களோ அதுவரைக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தும் நடந்து கொண்டுதான் இருக்கும் என்பதையும் நீங்கள் மனதிலே வைத்துக் கொள்ளுங்கள்.
எங்கோவொரு மூலையிலே பௌத்த மதகுரு கத்திக் கொண்டுதான் இருப்பார் அல்லது எங்கோவொரு சந்தியிலே பௌத்த மதத்தைச் சேர்ந்த பேரினவாத சமூகத்தை தூண்டுகின்ற ஒரு அரசியல்வாதி முஸ்லிம்களுக்கு எதிராக பேசிக் கொண்டுதான் இருப்பார். அப்படி இல்லையென்றால் எங்கேயோ ஒரு அரசியல்வாதி ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக ஊடகங்களிலோ அல்லது எங்கேயாவது ஒரு சந்தியில் இருந்து கொண்டு அவரைக் கைது செய்ய வேண்டும், அவரது குரல்களை நசுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அந்தப் பணியை அவர்கள் செய்து கொண்டுதான் இருப்பார்கள் என்றார்.
இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், பிரதேச சபை உறுப்பினர்கள், வட்டாரக் குழுத்தலைவர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.