அகில இலங்கை மலையக இந்து சபை கோரிக்கை.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- கதிர்காமத்தில் வருடம் தோறும் பள்ளிவாசலில் ஏற்றப்பட்டு வந்த சேவல் கொடி இந்த வருடம் ஏற்றப்படவில்லை என இந்து மக்கள் மத்தியில் பேசப்பட்டு சமூக வலைத்தளங்களில் இனமுறுகல் ஏற்படும் வகையில் செய்திகள் பரப்பிக்கொண்டு இருப்பதாகவும், சிலர் பள்ளிவாசல் அருகில் சென்று இடையூறு ஏற்படும், வகையில் செயப்படுவதாகவும், தகவல்கள் கிடைத்துள்ளன.இது தொடர்பாக இந்து மக்கள் அச்சமடைய தேவையில்லை. வீண் வாக்குவாதங்களையோ, மனஸ்தாபங்களையோ ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். என நாம் முருகபெருமானின் பகதர்களிடமும் இந்து மக்களிடமும் மிகவும் வினையமாக கேட்டுக்கொள்கிறோம். பிரிதொரு மத்தின் கொடியினையோ அல்லது சினனத்தினையோ ஏற்றுவது அது அவர்வர் விருப்பம் அவர்களின் மதத் தளத்தில் அவர்களின் கொடியினை ஏற்றுவதில் எவ்வித தவறுமில்லை. அவ்வாறான நிலையில் இவ்வாறு கொடியினை வைத்துக்கொண்டு இந்த நாட்டில் மீண்டும் ஒரு இனவாத்தினையோ மதவாதத்தினை தூண்டுவதற்கு இடமளிக்க கூடாது. என அகில இலங்கை இந்து குரு சபை தலைவரும்; மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் செயலாளருமான சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்தார்.
கதிரகாமத்தில் தற்போது தோன்றியுள்ள பதிய சர்ச்சையினை அடுத்து இன்று மாலை (09) ஹட்டனில் ஒழுங்கு செய்திருந்து ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இந்து மதம் என்பது ஒரு பரந்து விரிந்த மதம் அனைவராலும் போற்றக்கூடிய புனிதமான மதமாகும். அவர்கள் இந்து மதத்தின கொடியினை இவ்வளவு காலமும் ஏற்றி வந்தது அவர்கள் அதன் புனித தன்மையை உணர்ந்ததனால் தான். இவ்வருடம் ஏற்றவில்லை. என்று முரண்படுவது எவ்விதமான அரத்தமும்; கிடையாது. அவரவர் மதத்தில் அவர்களுடைய தேவைபாடுகளை உணர்ந்து சுதந்திரமாக செயப்படுவதற்கு அவரவருக்கு உரிமையுண்டு.
இந்து ஆலயத்தில் இந்து கொடி ஒன்றினை ஏற்றவில்லை என்றால், அதனை கேட்பதற்கு எமக்கு உரிமையுண்டு. ஆனால் பிரிதொரு மதத்தில் கொடியேற்வில்லை என்பதை சர்ச்சையாக கொள்ள வேண்டிய தேவைபாடு எதுவும் கிடையாது.என அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் கடந்த காலங்களில் சமயங்களிடையே நல்லிணக்கம் சகவாழ்வு ஏற்படும் ;வகையில் கொடிகள் ஏற்றப்பட்டு மத வழிபாடுகளில் ஈடுபடக்கூடிய வகையில் காணப்பட்டமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றே.
இந்த ஊடக சந்திப்புக்கு இந்த அமைப்பின் உப தலைவரும் கலஹா ஸ்ரீ குமரன் ஆலய பிரதம குருவுமான பிரகர குருக்கள் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.
கதிர்காம கொடியேற்றம் கடந்த மாதம் ஜூன் 28 ம் திகதி அரும்பிக்கப்பட்டு எதிர்வரும் மாதம் 13 ம் திகதி நீர்வெட்டுடன் நிறைவு பெறுவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது