செப்டெம்பருக்கு முன் க.பொ.த. மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் விநியோகம்


ஐ. ஏ. காதிர் கான்-

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் விநியோகம், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிறைவு செய்யப்படும் என, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் விண்ணப்பங்களில் 90 வீதமானவை, தற்போது பூர்த்தி் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார். 

வருடாந்தம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக, சுமார் மூன்றரை இலட்சம் ஆள் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் வியானி குணதிலக்க சுட்டிக்காட்டினார்.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணனிக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை (05) அடையாள அட்டைகள் வழங்கும் ஒருநாள் சேவை இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், (08) திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.
ஒருநாள் சேவையினூடாக, நாளாந்தம் சுமார் 1,500 பேர் வரை இச்சேவையைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -