ஜனநாயக நாட்டில் நல்லிணக்க பொறி முறை தாக்கத்தின் செயற்பாடுகள் அரசியலிலே தங்கியுள்ளது


 நல்லிணக்க பொறிமுறையின் ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சந்தநாயக்க தெரிவிப்பு.
எப்.முபாரக்-
னநாயக நாட்டில் நல்லிணக்க பொறி முறை தாக்கத்தின் செயற்பாடுகள் அரசியலிலே தங்கியுள்ளது என நல்லிணக்க பொறிமுறையின் ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சந்தநாயக்க தெரிவித்தார்.
நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் அரசினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மற்றும் அதனை செயற்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான திருகோணமலை ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ஒழுமுதீன் கியாஸ் தலைமையில் விழிப்பூட்டும் செயலமர்வு இன்று(27) திருகோணமலை அமரநாத் விடுதியில் நடைபெற்ற போதே அவர் இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்:இன்று மக்களிடம் நல்லிணக்கம் காணப்படுகின்ற போது சில கடும் போக்குவாதிகளினாலே சில தவறான கருத்துகள் பயன்படுத்தாப்பட்டு வருகின்றது.
அரசியல் தாக்கம் நாட்டில் அதிகமாக வேறூன்றியதனாலே தாக்கமும் பிரச்சினைகளும் வலுப்பெற காரணமாக அமைகின்றது.
அண்மையில் பயங்கரவாத செயற்பாட்டினால் நல்லிணக்கம் எங்கே சென்றது இனக்கலவரமாக நாடே மாறியது.
அனைத்திற்கும் உரிமைகள் இருக்கின்றது அதற்கேற்றால் போல் செயற்பட ஆயத்தமாக இருக்க வேண்டும்.இறைவனின் பெயரை பயன்படுத்தி அப்பாவி மக்களை கொண்றொழித்தார்கள் இது எவ்வளது பாரதூரமான குற்றமாகும்.
எனவே தான் மனித சமூதாயத்திற்கு சமயம் இன்றியமையாதது அதனை சிறந்த முறையில் கையாளப்படுத்த வேண்டும்.
நாட்டிலுள்ள மக்கள் ஒற்றுமையான செயற்பாட்டினை கைக்கொள்ள வேண்டியதோடு இதற்கு அரசியல் வாதிகளின் பங்களிப்பு மற்றும் அவர்களின் கைகளிலே தான் தங்கியுள்ளது.
ஒரு மனிதன் பிறக்கும் போது சிறந்த பிள்ளையாக அன்புடன் பிறக்கப்படுகின்றது பின்பு பழி உணர்ச்சிகள் ஏற்றப்படுகின்றது பின்பு அரசியல் மற்றும் குரோத வாதிகளினால் மாற்றி அமைகின்றார்கள் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -