எம்.பஹ்த் ஜுனைட்-
சமகால நிலைமைகள், இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அரசியல் ,சமூக பிரச்சினைகள் தொடர்பிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரான நிலவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடுவதற்காக இலங்கை கனடிய தூதரகத்தின் அரசியல் ஆலோசகர்களான மேரி ஜோஷ்சே, டீட்டர் பன்டி ஆகியோர் புதன்கிழமை (03) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைமைகளை சந்தித்து கலந்துரையாடினார்கள்..
சம்மேளனத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஏ.சீ.எம்.சத்தார் மற்றும் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் (நளீமி) , பிரதி செயலாளர் எம்.சீ.எம். ஜவ்பர். ஆகியோர் கலந்து கொண்டனர்.