பாறுக் ஷிஹான் -கல்முனை பகுதியில் இருந்து அன்னமலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து வண்டி மீது கல் வீச்சு தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியில் இச்சம்பவம் சனிக்கிழமை(27) மதியம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளை தனியார் பேரூந்து வண்டியில் அதிகளவான மக்கள் பயணம் செய்துள்ள போதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
மேற்படி தாக்குதலினால் பேரூந்து வண்டியின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் தாக்குதல் நடாத்தியவர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
மேலும் பயணத்தை இடைநிறுத்திய தாக்குதலுக்குள்ளான பேரூந்தில் இருந்து இறக்கப்பட்ட மக்கள் அநேகமானோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதை காண முடிந்தது.
சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -