கல்முனை மாநகர சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சப்ராஸ் மன்சூர், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களை சந்தித்து தனது நியமன மற்றும் சத்தியப்பிரமாணப் பத்திரங்களைக் கையளித்தார்.
இந்நிகழ்வு இன்று புதன்கிழமை (10) பிற்பகல் கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினராக பதவி வகித்த சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ், இராஜினாமா செய்ததையடுத்து, கட்சித் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் சப்ராஸ் மன்சூர் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.