உகந்தமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக இடம்பெற்ற கொடியேற்றம்.


காரைதீவு  சகா-

ரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழாவிற்கான கொடியேற்றம் நேற்று(03) புதன்கிழமை காலை 10.30க்கு கோலாகலமாக நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான அடியாhர்கள் புடைசூழ ஆலயத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க(சுதா) கொடியைத்தாங்கிவர ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ.க.கு.சீதாராம் குருக்கள் கொடியேற்றத்தை மிகச்சிறப்பாக நடாத்திவைத்தார்.

அவருக்குதவியாக சிவஸ்ரீ.ஆ.கோபிநாதசர்மா சிவஸ்ரீ. சீ.கு.கௌரிசங்கர் குருக்கள் சிவஸ்ரீ சீ.கு.கோவர்த்தனசர்மா ஆகியோர் செயற்பட்டனர்.

வழமைக்குமாறாக கிழக்குமாகாணத்தின் சகல பாகங்களிலுமிருந்தும் சுமார் 5000 அடியார்கள் ஆலய வளாகத்தில் ஒன்றுகூடியிருந்தனர்.

அனைவரும் எழுப்பிய அரோஹரா கோசம் விண்ணைப்பிளந்தது எனலாம். மிகவும் உணர்வுபூர்வமாக இம்முறை கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.

சிங்கள பௌத்தமக்களும் கலந்துகொண்டிருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரனும் சமுகமளித்திருந்தார்.

கொடியேற்றத்தன்று கதிர்காமத்திற்கான பாதயாத்திரையிலீடுபடும் 4500 யாத்திரீகர்களும் இக்கொடியேற்றத்தை கண்டு காட்டுக்குள் பிரவேசித்தார்கள்.

காரைதீவு உகந்த அடியார்கள் சங்கத்தினர்காலை ஆகாரமாக தோசை இட்லி வடை பாயாசம் போன்றவற்றை ஆயிரக்கணக்கானஅடியார்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.மதியம்பல மடங்களிலும்அன்னதானங்கள் இடம்பெற்றன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -