காரைதீவு சகா-
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காமம் மற்றும் உகந்தமலை ஸ்ரீ முருகனாலய வருடாந்த ஆடிவேல்விழா உற்சவத்திற்கான கொடியேற்றம் நாளை 03 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறும்.
நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் இவ் ஆடிவேல்விழா உற்சவம் யூலை மாதம் 18ஆம் திகதி வியாழக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
அருணகிரிநாதரால் பாடல்பெற்ற கதிர்காமத்தில் நாளை இரவு முதல் தொடர்ந்து இரவுப்பெரஹராவும் திருவிழாவும் இடம்பெறும். அங்கு நாளை முதல் இந்துயாத்திரீகர் விடுதி மற்றும் தெய்வானையம்மனாலயவிடுதியிலும் தினமும் அன்னதானம் இடம்பெறும். வழமைபோல் சிவபூமி அன்னதான சபையினர் பொறுப்பளர் எஸ்.ஞானசுந்தரம் தலைமையில் நாளை அன்னதானத்தை இந்துயாத்திரிகர்விடுதியில் ஆரம்பிக்கிறது..
ஏனைய சிலஇடங்களில் ஆங்காங்கே அன்னதானம் இடம்பெறும்.
இதேவேளை கிழக்கின் தென்கோடியில் நாநிலங்களின் மத்தியில் மனோரம்மியமான சூழலில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆலய பிரதமகுரு ஈசானசிவாச்சாரியார் ஆகமப்பிரவீணா சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் கிரியைகள் யாவும் நடைபெறும்.
கொடியேற்றத்திருவிழாவன்று மலைத்திருவிழா மயில்திருவிழா தேர்த்திருவிழா போன்ற சிறப்பு திருவிழாக்கள் நடைபெறும்.
அன்றைய தினம் காரைதீவு உகந்தை யாத்திரீகர் சங்கத்தினரின் அன்னதான நிகழ்வு காரைதீவு மடத்தில் இடம்பெறும். அத்துடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் அக்கரைப்பற்று க.கோடீஸ்வரன் தம்பிலுவில் அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் ஆகியோரும் அன்னதானம் வழங்குவர் என ஆலய வண்ணக்கர் ஜே.எஸ்.டி.எம்.சுதுநிலமே திசாநாயக்க(சுதா)தெரிவித்தார்.
விழாக்காலங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.