கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஜெ.கே.எஸ்.கே.ஜெயநித்தி இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கே.எச் சுஜீத் பிரியந்த பதவியேற்றார்.
குறித்த பதவியேற்பு நிகழ்வு இன்றைய தினம்(2) காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு கல்முனை வீதியில் அமைந்துள்ள கல்முனை தலைமையக பொலிஸ் காரியாலயத்தில் இடம்பெற்றது.
சமயத்தலைவர்களின் ஆசியுடன் சுபநேரத்தில் புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
பதவியேற்பு நிகழ்வில் சிரேஸ்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸார் சமய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஜெ.கே.எஸ்.கே.ஜெயநித்தி என்பவர் நாரேன்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.