எச்.எம்.எம்.பர்ஸான்-
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய போதையொழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் இன்று (3) ம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கறுவாக்கேணி வீதி செம்மண்ணோடையில் இயங்கி வரும் வாராந்த சந்தையில் குறித்த வீதி நாடகம் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவு ஏற்பாடு செய்த இவ் வீதி நாடகத்தில் அதிதிகளாக வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.கபூர், கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட், நாவலடி மர்கஸ் அந்நூர் கல்வி நிறுவனத்தின் அதிபர் ஏ.ஹபீப் காஸிமி மற்றும் பிரதேச பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த வீதி நாடகத்தில் நாவலடி மர்கஸ் அந்நூர் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் பங்குபற்றி நடித்தமை குறிப்பிடத்தக்கது.