மாளிகைக்காடு பிரதேச அபிவிருத்தி வேலைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்-எம்.எச்.எம் இஸ்மாயில்



எம்.எஸ்.எம். பாதுஷா-

மூகங்களுக்கிடையில் எந்தப் பிரச்சனைகளும் பிளவுகளும் வராமல் எமது பிரதேச அபிவிருத்தி வேலைகளை தொடர்ந்து முன்னெடுக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக காரைதீவு பிரதேச சபையின் சிரேஷ்ட உறுப்பினர் எம்.எச்.எம் இஸ்மாயில் தெரிவித்தார்.

கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தின் 2018 - 2019 மூலமாக மாளிகைக்காடு பிரதேசத்தின் அபிவிருத்தி செய்வதன் ஒரு கட்டமாக இலவச மின்சார வசதிகள் வழங்கும் நிகழ்வு (07) மஸ்ஜித் நூறா பின்த் அத்தாயி பள்ளிவாசலில் நடைபெற்றது.

காரைதீவு பிரதேச சபையின் சிரேஷ்ட உறுப்பினர் எம்.எச்.எம் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


இந்நிகழ்வில், தலைமை வகித்து பேசிய அவர் மேலும் கூறியதாவது,

கம்பபெரலிய அபிவிருத்தி திட்டத்தின் மூலம் உள்ளூராட்சி, மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 25 குடும்பங்களுக்கு இலவச மின்சார இணைப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் மூலமாக மாளிகைக்காடு பள்ளிவாசல் நிர்மாண வேலைக்காக நூறா பின்த் அத்தாயி பள்ளிவாசல் மற்றும் ஷெய்க்கா அப்துர் ஷெய்ர் மத்ரஸா ஆகியவற்றுக்கு தலா 1 மில்லியன் ரூபா வீதம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் மூலமாக நிதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

மாளிகைக்காடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களினாலும் பல அபிவிருத்தி வேலைகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கியமாக தலைவர் ரவூப் ஹக்கீமினால் அல் - ஹுசைன் குறுக்கு வீதி, சிற்றி பிளேன் மூலமாக 2 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதலாவது கொங்ரீட் வீதி இடப்பட்டுள்ளது. மற்றும் பைஸல் காசிம் எம்.பி.யினால் ஆலிம்1ஆம் 2ஆம் குறுக்கு வீதி வீதிகளுக்கு கொங்ரீட் இடப்பட்டுள்ளது. அதுபோல் மன்சூர் எம்.பி.யினால் வாய்க்கால் வீதிக்கு 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வாய்க்கால் 1ஆம் 2ஆம் வீதிகள் மற்றும் அந் - நூர் பள்ளிவாசல், சாலிஹீன் பள்ளிவாசல், நூறா பின்த் அத்தாயி போன்ற பள்ளிவாசல்கள் ஆகியவற்றுக்கு நஸீர் எம்.பி. மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலிஹீன் பள்ளிவாசல் வீதிக்கு 1 மில்லியன் செலவில் கொங்ரீட் இடப்பட்டுள்ளது.

அத்தோடு, குடிநீர் வசதி இல்லாத மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், எனும் தனி அரசியல் மூலமாக மக்களின் பிரச்சினைகளை அறிந்து அவர்களுக்கு நிறைந்த நன்மைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

எதிர்காலத்தில் அரைகுறை வீட்டில் வாழும் (வசதி இல்லாத) மக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதனையும் வெகு விரைவில் வழங்குவதற்கு இருக்கின்றோம்.

இதுவரையில் சுமார் 50 மில்லியன் ரூபாய் செலவில் மாளிகைக்காடு பிரதேசத்தில் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எமது மக்களுக்கு இன்னும் பல சேவைகளைச் செய்ய தீர்மானித்திருக்கின்றோம். எமது காரைதீவு பிரதேசம் தமிழ் - முஸ்லிம் எனக் கலந்து வாழ்ந்து வந்தாலும் இனங்களுக்கிடையில் பிளவுகள் வராது ஒற்றுமையாக வாழும் பிரதேசம் எமது காரைதீவு பிரதேசம்.

பிரதேச சபை உறுப்பினர் என்ற வகையில் சமூகங்களுக்கிடையில் மேலும் எந்தப் பிரச்சனைகளும் பிளவுகளும் வராமல் பாதுகாத்து வருகின்றோம். இவற்றோடு, ஒற்றுமையாக எமது பிரதேச அபிவிருத்தி வேலைகளை தொடர்ந்து முன்னெடுக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாகவும் காரைதீவு பிரதேச சபையின் சிரேஷ்ட உறுப்பினர் எம்.எச்.எம் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -