நாட்டில் இலஞ்சமும் ஊழலும் தொடர்ந்தும் அதிகரிக்குமானால் தேசிய வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதுடன் இலங்கை போன்ற நாடு அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவே அன்று தொடக்கம் இற்றை வரை காணப்பட்டு வருகிறது என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) பதில் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.
கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இன்று (03) சிவில் சமூக பிரதிநிதிகளுக்கான இலஞ்சம் ஊழல் ஒழிப்பு தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்
இலஞ்சம் எடுப்பதும் கொடுப்பதும் இடைத்தரகர்களாக செயற்படுவதும் பாரிய குற்றமாக கருதப்படுகிறது இலங்கை போன்ற நாட்டில் இலஞ்சம் குறைந்தபாடில்லை அதிகரித்தே வருககறது இதனால் வெளிநாடுகளில் வட்டியுடன் கடன் பெற்று நாட்டை நடாத்தக்கூடியதாகவுள்ளது நாடு பின்தங்கி அபிவிருத்தியை கண்டு கொள்ளாமல் காணப்படுகிறது.
சோமாலியா போன்ற நாடு வறுமைக்கு காரணம் அங்கு இலஞ்சம் அதிகரித்தமையும் ஒரு காரணமாகும் அரச அதிகாரிகள் மக்களுடைய வரிப்பணம் மூலமே சம்பளம் பெறுகிறார்கள் அரச திணைக்களங்களை சேர்ந்தோர்கள் மக்களிடத்தில் நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் தங்களது கடமைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் சேவைகளை முடித்துக் கொள்வதற்காக இலஞ்சம் வழங்கப்படுகிறது இதில் அரச அதிகாரிகள் இவ்வாறான செயற்பாடுகளில் கைது செய்யப்பட்டால் வாழ்க்கை தலை கீழாக மாறி சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் அரச திணைக்களங்களை சேர்ந்தோர இன்னும் சிலர் உயர் பதவிகளையுடையோர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள் .
இலஞ்ச ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டால் குறித்த நபர் மாவட்ட நீதிமன்றம் ஊடாக விசாரணைகள் இடம் பெறாது மாறாக கொழும்பில் மாத்திரமே விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
பொது மக்களாகிய நீங்கள் பயமில்லாமல் இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அறியத்தாருங்கள் அவசர இலக்கம் 1954 ஊடாகவும் எழுத்து மூலமாகவும் அரச அதிகாரிகளுக்கு எதிராக தங்களது முறைப்பாடுகளை பயமின்றி முன்வையுங்கள் எமது நாட்டில் இலஞ்ச ஊழலற்ற தேசமாக மாற்றியமைக்க அனைவரும் ஒத்துழையுங்கள் என்றார்.
இவ் நிகழ்வில் இலஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை பொறுப்பதிகாரி அபேசிங்க மற்றும் விசாரணை அதிகாரி லக்மால் உட்பட கபே அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ஏ.ஆர்.ராபில், கிண்ணியா பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.