படிக்காவிட்டாலும் நல்ல பண்புள்ளவர்களை அரசியலுக்கு தெரிவு செய்ய வேண்டும் - பிரதேச சபை உறுப்பினர்-ஜௌபர்

எச்.எம்.எம்.பர்ஸான்-

ங்களுடைய முஸ்லிம் சமூகம் அல்லாஹ்வை நம்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாக பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் எம்.பீ.எம்.ஜௌபர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி மூன்றாம் வட்டார கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் ஏற்பாட்டில் தையல் பயிற்சியினை நிறைவு செய்த யுவதிகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (10) மீராவோடை அந்நூர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் அங்கு பேசுகையில்,

எங்களது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏன் இவ்வாறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றார்கள் என்று நாங்கள் நோக்குகின்ற போது எமது சமூகம் நிம்மதியாக வாழ வேண்டும் அல்லது மார்க்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வாழ்வதால்தான் நாங்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றோம். இருந்தாலும் மார்க்கத்தை பின்பற்றாதவர்களாக நாங்கள் ஒருபோதும் இருந்துவிட முடியாது.

படிக்காதவர்களாக இருந்தாலும் பண்பானவர்களாக இருக்க வேண்டும் இன்று சில அரசியல்வாதிகளை பார்க்கின்ற போது அவர்களுடைய வாயிலிருந்து வருகின்ற வார்த்தைகள், அவர்கள் நடக்கின்ற நடைமுறைகள் அவர்கள் அரசியல் செய்வதற்கு பொருத்தமானவர்களா இவர்களை யார் தெரிவு செய்தார்கள் என்கின்ற கேள்விகளுக்கு நாங்கள் உட்படுத்தப்பட்டுள்ள சமூகமாக இருந்து கொண்டிருக்கின்றோம்.

எனவே நல்ல குடும்பத்தில் பிறந்த, நல்ல பண்புள்ளவர்கள்தான் அரசியலுக்கு செல்ல வேண்டும் அவ்வாறானவர்களைத்தான் மக்களும் தெரிவு செய்ய வேண்டும். நாளைய எமது இளம் சமுதாயத்திற்கு நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்குகின்ற, தேர்ந்தெடுக்கின்ற பணியை நாம் அனைவரும் செய்ய வேண்டும் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -