கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட மூன்று தோட்ட வீதிகள் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைப்பு.



ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- 

நுவரெலியா மாவட்ட ஹங்குராஙகெத்த பகுதியில் கபரகல,கோணபிட்டிய,மெரிகோல்ட் ஆகிய தோட்டங்களில் கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுமார் 30 லட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட கொங்கிறீட் வீதிகள் மக்கள் பயன்பாட்டிக்காக கையளிக்கும் நிகழ்வு நேற்று (05) திகதி விசேட பிராந்திங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி ராதாகிஐருஸணன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது மூன்று வீதிகளும் அமைச்சரினால் மக்கள் பயன்பாட்டுக்காக கையளிக்கப்பட்ட.
குறித்த வீதிகள் கடந்த பல வருட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்டதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர்.
குறித்த வீதியில் பாரிய குன்றும் குழியுமாக காணப்பட்டதனால் நோயாளர்களை கொண்டு செல்வதற்கு பெரும் சிரமப்பட்டதுடன் தங்களுடைய அத்தியவசிய பொருட்களை கொண்டுவருவதற்கு முச்சக்கர வண்டிகளுக்கு அதிக பணம் செலுத்த வேண்டியிருந்தது.
இந்த நிலைமையினை மக்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததனை தொடர்ந்து அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீதியின் ஒரு பகுதி புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -