பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் போட்டி நுழைந்தது. அப்போது இங்கிலாந்து வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன. முதல் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. மூன்றாவது பந்தில் ஆறு ரன்கள் கிடைத்தது.
அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் ஓடிய நிலையில் ஓவர் துரோ மூலம் அந்த பந்து பவுண்டரி சென்றதால் இங்கிலாந்துக்கு அந்த பந்தில் மொத்தம் ஆறு ரன்கள் கிடைத்தது. அடுத்த பந்தில் ஒரு ரன் ஓடிய நிலையில் இரண்டாவது ரன் ஓடிய ரஷீத் ரன் அவுட் செய்யப்பட்டார்.
கடைசி பந்தில் இங்கிலாந்துக்கு இரண்டு ரன் தேவைப்பட்டது. கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. அந்நிலையில் ஒரு ரன் எடுத்த இங்கிலாந்து, இரண்டாவது ரன்னுக்கு முயன்றபோது வுட்ஸ் ரன் அவுட் செய்யப்பட்டார். எனவே இங்கிலாந்து கடைசியில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமன் செய்தது.பிபிசி