ஹட்டன் கே.சுந்தரலிங்கம் -
புகையிரத சேவையாளர்கள் நேற்று (03) திகதி முதல் ஆரம்பித்த வேலை நிறுத்தப்பபோராட்டம் காரணமாக, நேற்று. நல்லிரவு முதல் மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.
இதனால் புகையிரதத்தில் பயணஞ் செய்யும் மாணவர்கள் அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மலையக பகுதியில் உள்ள பகையிரத நிலையங்களின் கதவுகள் யாவும் பூட்டப்பட்டு இருந்ததுடன், பயணிகள் ஓய்வு அறை,உணவகம் உட்பட அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன.
குறித்த வேலை நிறுத்தப்போராட்டம் புகையிரத திணைக்கள ஊழியர் ஒருவர் கடமை நேரத்தில் மது பானம் அருந்தி இருந்தற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுமாறு பொது போக்குவரத்து செயலாளர் ஒருவர் அலுத்தம் கொடுப்பதாக எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்தப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எது எவ்வாறான போதிலும் புகையிரத சேவையினை அத்தியசிய சேவையாக பிரகடணப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வேலை நிறுத்தப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.