நடுக்காட்டுக்குள் நாவலடியில் ஜீவசேவையாற்றும் மருத்துவமுகாம்.

காரைதீவு நிருபர் சகா-
ருடாந்தம் கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கான நடுக்காட்டிற்குள் நாவலடியில் நடாத்தப்பட்டுவரும் இலவச மருத்துவ முகாம் இவ்வருடமும் தமது சேவையை (01)ஆரம்பித்துள்ளது.

கிழக்கு மாகாண சுகாதாரத்திணைக்களத்தின் மேலதிக மாகாண சுகாதாரப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி.டாக்டர் அழகையா லதாகரன் இச்சேவையை தனது சக வைத்தியர்களுடன் இணைந்து கடந்த பலவருடங்களாகச்செய்துவருகிறார்.
நடுக்காட்டிற்குள் தங்களது உயிரைத்துச்சமென மதித்து ஏனைய உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் இந்த வைத்தியர்கள் பலத்த இன்னல்களுக்கும் வசதியீனங்களுக்கும் மத்தியில் மேற்கொண்டுவரும் இவ்வைத்தியசேவை மிகவும் பெறுமதியானது.பாராட்டுக்குரியது.

டாக்டர் லதாகரனோடு பெரும்பான்மையின வைத்தியர்களும் இணைந்து இச்சேவையை நடாத்திவருகின்றனர்.
நடுக்காட்டிற்குள் வைத்து அடியார்களுக்கு ஏதாவது சுகயீனம் ஏற்படும்பட்சத்தில் இம்முகாம் ஒருவரப்பிரசாதமாகும்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -