நாட்டின் இனப்பிரச்சினையினை தீர்த்து மலையக மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஜனாதிபதியே மலையக மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.


அமைச்சர் விஇராதாகிருணன் வேண்டுகோள்.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- 
னறு எமது நாட்டில் ஒரு ஜனாதிபதி தேர்தல் வர இருக்கிறது.இந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும.; இதில் நன்கு சிந்தித்து இந்த நாட்டின் இனப்பிரச்சினையினையும் தீர்த்து மலையக மக்களுக்கு சேவையாற்றக்கூடிய, ஜனாதிபதியையே மலையக மக்கள் தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாது, நாம் தெரிவு செய்யும் ஜனாதிபதி நமக்கே இடஞ்சலாக வந்துவிடக்கூடாது. என்பதில், மிகவும் கவனமாக இருக்க வேண்டும.; இன்று முஸ்லிம் மக்கள் அதிமாக வாழுகின்ற, பகுதிகளில் பல்வேறு அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன.இன்று (07) கண்டிக்கு போக முடியாத நிலை உருவாகியுள்ளது.யாரோ ஒருவர் செய்த காரியத்;திற்காக முழு முஸ்லிம் மக்களை பாதிக்கும் வகையில் செயப்பட கூடாது. ஆகவே இந்த விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும.; என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
கம்பெரலிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் லிந்து மட்டகெலே தோட்டத்தில் கொங்கிறீட் இட்டு புனரமைக்கப்பட்ட மூன்று பாதைகள் நேற்று (07) திகதி அமைச்சரினால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் கே.சிவஞானம் அவர்களின் வேண்டுகோளுக்கமைய சின்ன மட்டுகெலே,ஏழாம் கொலனி,12 ம் கொலனி ஆகிய பிரதேசங்களுக்கு செல்ல பாதைகள் விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கம்பெரலிய வேலை திட்டத்தின் மூலம் சுமார் 60 ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவர் அங்கு தொடர்;ந்து உரையாற்றுகையில் மலையக அபிவிருத்திக்கு அதிமாக பணத்தினை செலவு செய்தது, இந்த அரசாங்கம் தான். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சகல பிரதேசங்களுக்கும் சமமாக நிதிகளை பெற்றுக்கொடுத்து, பல அபிவிருத்தி பணிகளை நாடு பூராகவும் முன்னெடுத்து வருகிறார். மலையக பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக இன்று ஒரு விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சு என்று ஒரு அமைச்சே உருவாக்கப்பட்டுள்ளது. அன்று சமூக அபிவிருத்தி என்று ஒரு அமைச்சை அமரர் சந்திரசேகரனுக்கு வழங்கியதனால் தனி வீட்டுத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
அதே போன்று தான் நாங்கள் இன்று பல வேலைத்திட்டங்களை தோட்ட மக்களுக்காக முன்னெடுத்து வருகின்றோம.; பாதைகளை அபிவிருத்தி செய்துள்ளோம.; பாடசாலை கட்டடங்களை அபிவிருத்தி செய்துள்ளோம். குடி நீர் வழங்குவதற்கான பல நடவடிக்;கைகள் எடுத்துள்ளோம். இன்னும் கம்பெரலிய போன்று பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
தோட்டங்களுக்கு செல்லும் பாதைகள் சீராக இருந்தால் தான். எமது மக்கள் உற்பத்தி செய்யும் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும். அது மட்டு மன்று அவசரத்திற்கு நோயாளிகளை கொண்டு செல்வதென்றாலும் கூட வீதிகள் சீரா இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் இடைவெளியிலேயே இறந்து விடுவார்.இன்று அரசாங்கம் சுவசிரிய என்ற எம்புலன் சேவையினை ஆரம்பித்துள்ளது. அந்த எம்புலன்ஸ தோட்டத்திற்கு வருவது என்றாலும் சரி தீ பிடிக்கும் போது தீயணைப்பு இயந்திரம் வருவதென்றாலும் சரி வீதிகள் நன்றாக இருக்க வேண்டும.; அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் வர முடியாது. ஆகவே தான் வீதிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து செயப்படுகின்றோம்.வீதிகள் மாத்திரமன்று இன்று மலையகத்திற்கு பல்வேறு அபிவிருத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. என்றால் இது இந்த அரசாங்கத்தில் தான் என அவர் மேலும் தெரிவித்தார்.
நுவரெலியா பிரதேசசபை உறுப்பினர் கே.சிவஞானம் அவர்களின் ஏற்பாடடில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் லோரன்ஸ்,பிரதிச்செயலாளர் அனுசா சந்திரசேகரன்,நிதிச் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன்.உட்பட மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் மற்றும் அனுசா சந்திரசேகரன் அவர்கள்,





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -