அவர் மேலும் தெரிவிக்கையில்..
மிக விரைவில் இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலாக இருக்கலாம் அல்லது பாராளுமன்ற தேர்தலாகஇருக்கலாம், எந்தவொரு தேர்தலிலும் சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸ் வேட்பாளராக சாய்ந்தமருது மக்கள் சார்பாகநான் களமிறங்கவுள்ளேன், இதனை யாரும் தடுக்கமுடியாது, இரவு வேளைகளில் கூட்டங்கள் நடாத்தி என்னை இதில்இருந்து தடுக்க வேண்டும் என சிலர் பிரயத்தனம் எடுக்கின்றனர்.இது ஒருபோதும்வெற்றியளிக்காது.
சிலர் பதவிகளை பெற்ற கையேடு தொலைபேசிகளை மூடி வைத்தது விட்டு மக்களோடு எந்த தொடர்பும் இல்லாமல்செயல்படுகின்றனர், ஆனால் நான் அவ்வாறு அல்ல மக்களோடு மக்களாக இருந்து அந்த மக்களின் தேவை அறிந்துசேவையாற்றுகின்றவன். எனது மக்களுக்கான சேவையை சில சுயநல அரசியல்வாதிகளின் தேவைக்காகநிறுத்தப்போவதில்லை என என்னை விரும்புகிற மக்களுக்கும் என்னை விரும்பாத சில அரசியல் வேசதாரிகளுக்கும்சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
கல்முனை பிராந்தியத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் நீண்டகால இழுபறி நிலையில் உள்ளது, இதனைஅடுத்த சந்ததிகளுக்கும் இழுத்துச்செல்ல முயலுகின்றனர். அந்த பிரச்சனைகளை வைத்துக்கொண்டே தொடர்ந்தும்அரசியல் செய்ய விரும்புகின்றனர். இதில் இருந்து மக்கள் விடுபட வேண்டும், பிரச்சினைகளுக்கு அவ்வப்போதேஉடனைத்தீர்வு எட்டப்பட வேண்டும், அவ்வாறான ஒரு முயற்சியின் பிரகாரமே எதிர்வரும் தேர்தலில்போட்டியிடவுள்ளேன்.
இது குறித்த எனது எதிர்கால அரசியல் முடிவுககளை தலைமையிடமும் பேசியுள்ளேன். எதிர்வரும் தேர்தல்சாய்ந்தமருது மக்களோடு இணைந்து சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைமையில் எனது பணி தொடரும் எனவும்தெரிவிக்கிறேன்.