நீதிபதிகள், காதி நீதிவான்களும் மனிதர்களே. அவர்கள் தன் முன் வைக்கப்படும் சாட்சியங்கள் அடிப்படையில் தீர்ப்பை வழங்குகிறார்கள். தீர்ப்பால் பாதிக்கப்படும் எவரும் நீதிபதியை விமர்சிக்கத்தான் செய்வர்.
தீர்ப்பில் சில வேளை காதி நீதிவான் வேண்டுமென்றே பிழையாகவும் தீர்ப்பு வழங்கலாம். அதற்கு அந்த காதியே பொறுப்பே தவிர சட்டம் பிழையல்ல. இதனால்த்தான் காதிகள் என்போர் நியமிக்கப்படும் போது பல்கலைக்கழக பட்டம் பெற்ற உலமாக்களை நியமிக்க வேண்டும் என உலமா கட்சி நீண்ட காலமாக சொல்லி வருகிறது.
தற்போதுள்ள காதிகள் பலர் சாதாரண தரம் சித்தியடைந்தவர்களாகவும், சிலர் சட்டத்தரணிகளும் உள்ளனர்.
நீதியை, நீதிபதியின் தீர்ப்பை விமர்சித்தால் அது குற்றமாக நம் நாட்டில் பார்க்கப்படும் அதே வேளை காதி நீதிவானின் தீர்ப்பை விமர்சித்தால் அது குற்றமாக அரசாங்கத்தால் பார்க்கப்படுவதில்லை. இதற்கு காரணம் தீர்ப்பில் பிழை கண்டாலும் அதனை சுட்டிக்காட்ட முடியும் என்ற சுதந்திரத்தை இஸ்லாம் வழங்கியுள்ளதாலாகும்.
அத்துடன் பிள்ளைக்கான தாபரிப்பை கணவன் வழங்காத போது அவனை சிறையில் அடைக்கும் அதிகாரம் காதி நீதிவானுக்கு இல்லை. அவ்வாறு நடப்போருக்கு எதிராக காதியே பொலிஸுக்கு அறிவிக்கக்கூடிய வகையில் அவருக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.
முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி