நிந்தவூர் அல் அஷ்ரக் தேசியப் பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தகுதி


அப்துல் கபூர்-
நிந்தவூர் அல் அஷ்ரக் தேசியப் பாடசாலை விவாதக் குழு அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட தமிழ் தினப் போட்டியில் விவாத பிரிவில் பங்குபற்றி முதலாம் இடத்தினை பெற்றதன் மூலம் தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம்.ஜாபிர் தினகரனுக்கு தெரிவித்தார்.
அக்கரைப்பற்று அக்/இராமகிருஷ்ண மிஷன் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற இப்போட்டியில் தி/கோணேஷ்வர மஹா வித்தியாலயத்தையும் மட்/வின்ஷன்ட் வித்தியாலத்தையும் எதிர்த்து நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசியப்பாடசாலை விவாத அணி போட்டியிட்டு வெற்றி பெற்றதன்மூலம் தேசிய மட்ட போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
இம்மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (8) பாடசாலை காலை ஆராதனையின் போது நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிபர் கலந்து கொண்டு உரையாற்றுகையில்,
பாடசாலை மாணவர்கள் பாடவிதான மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவது அதிகரித்துக்கொண்டு வருவதாகவும் அதன் மூலம் இப்பிராந்தியத்தில் இப்பாடசாலையின் நாமத்தை முதற்தரத்திற்கு கொண்டு வரமுடியும். இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்குபற்றுவதன் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு நுழைவது இலகுவான விடயமாக இன்று மாறியுள்ளதாகவும் அதற்காக மாணவர்கள் தங்களை இரு துறைகளிலும் அர்ப்பணித்து செயற்பட வேண்டும்.
பாடசாலைச் சமூகம் இம்மாணவர்களின் திறமையினை பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்ற ஆசிரியர்கள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் பூரண ஒத்துப்பினை வழங்குகின்ற பெற்றோர்களையும் பாராட்டுவதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
இவ் விவாத போட்டியில் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் மாணவர்களான எம்.என். ஹசான் அக்தர் , ஏ.எல். முஸ்பிர் அஹமட், எம்.எ.எ.அக்காஸ் முஹம்மட் ஆகியோர் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


படம்:
பங்கு பற்றிய மாணவர்கள் உட்பட அதிபர் மற்றும் பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர்கள்]




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -