நீரில் முழ்கி கரையொதுங்கியதாக கூறப்பட்ட இளங்குடும்பஸ்தரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

பாறுக் ஷிஹான்-

டற்கரையோரமாக விழுந்து நீரில் முழ்கி கரையொதுங்கியதாக கூறப்பட்ட இளங்குடும்பஸ்தரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

சனிக்கிழமை(6) மாலை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பள்ளி கடலோரமாக இனந்தெரியாத குடும்பஸ்தரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு உயிரிழந்து கிடந்தவர் கல்முனைக்குடி-2 28 பி கிறீன் பில்ட் வீட்டுத்திட்டத்தை சேர்ந்த முஹம்மட் நஸ்லான்(வயது-34) என்ற ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

சடலமாக மீட்கப்பட்டவர் அண்மைக்காலமாக குடும்ப பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து அடிக்கடி சச்சரவு செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் மதுபோதை பாவித்திருந்த நிலையில் மீட்கப்பட்டவரது சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபடப்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -